kgf 2 vs gurkha 2
Tamil Cinema News | சினிமா செய்திகள்

“வெந்து தணிந்தது காடு.. K.G.F 2 vs கூர்கா 2-ன்னு டைட்டில் போடு…” – வைரலாகும் மீம்கள்..!

--- Advertisement ---

முன்னணி நாயகர்களின் படங்கள் குறித்த அப்டேட்டுகளை கலாய்ப்பது நெட்டிசன்கள் வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் ட்ரைலரை யோகி பாபுவின் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளது.

kgf 2 vs gurkha 2

சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி வரும் இந்த படம் சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் வெளியிட்டுட்டிருந்தார். அதோடு நூறாவது நாள் படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.

kgf 2 vs gurkha 2

நெல்சனின் முந்த படங்கள் போலவே இதிலும் சிவகார்த்திகேயன், அனிரூத் காம்போ இடம் பெற்றுள்ளது. அரபிக் குத்து என்னும் பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிரூத் இசையமைத்து பாடியிருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. இதையடுத்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார்.

kgf 2 vs gurkha 2

இதற்கிடையே இந்த படம் குறித்த ரசிக்கர்களின் எதிர்ப்பார்ப்பு எகிறி இருந்தது. அதற்கு தீனி போடும் வகையில் படப்பிடிப்புத்தள புகைடங்கள் வெளியாகி இருந்தாலும், டீசர் அல்லது ட்ரைலரை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரி வந்தனர். அதற்கேற்ப இன்று ட்ரைலர் வெளியாகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் முன்னோட்டத்தை வெளியிட்டது.

kgf 2 vs gurkha 2

இந்த ட்ரைலரின் படி சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். நஜிக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படம் யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்காவுடனும், விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கியுடனும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---