Connect with us

சினிமா செய்திகள்

தமிழ் சினிமா தவறவிட்டு தரமான நாட்டுக்கட்ட.. தேவிப்பிரியா வெளியிட்ட புகைப்படம்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

By TamizhakamDezember 26, 2024 4:11 PM IST

பிரபல நடிகை தேவிப்பிரியா வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. மூக்கு முழியுமாக, மப்பும் மந்தாரமுமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த உடல் வாகுடன் கிளாமர் ராணியாக காட்சியளிக்கும் நடிகை தேவி பிரியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தின் வைரலாகி வருகிறது.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தேவி பிரியா சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னை படுக்கைக்கு அழைத்த சினிமா பிரபலம் குறித்து மனம் திறந்திருந்தார்.

அவர் பேசியதாவது, எனக்கு ஒரு போன் கால் வந்தது. பெங்களூரில் இருந்து பேசுவதாக கூறி டீசன்டாக அதுவும் நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஒருவர் பேசினார். நாளை மறுநாள் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். நீங்கள் பெங்களூருக்கு வர முடியுமா..? என்று கேட்டார்.

நானும் சரி வருகிறேன் என்று கூறினேன். எப்போது வருவீர்கள்..? என கேட்டார். நிகழ்ச்சி நடக்கும் என்று காலை வந்து விட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்று விடுவேன் என்று கூறினேன். இல்லை இல்லை நீங்கள் நாளைக்கே வர வேண்டும் என்று கூறினார்.

எதற்காக வரவேண்டும்..? என்று கேட்டேன். இல்லை மேம்.. என் ஆர் ஐ நபர் ஒருவர்.. பெரிய பணக்காரர்.. அவருக்கு நாங்கள் கொடுக்க உள்ள இரவு விருந்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

அப்படியான விருந்துகளில் எல்லாம் நான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறினேன். சரி என போனை கட் செய்துவிட்டார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு அந்த நபர் உங்களுடைய பிஆர்ஓ அல்லது மேனேஜர் நம்பர் இருந்தால் கொடுங்கள்.

நான் அவர்களிடம் பேசிக் கொள்கிறேன் என்று கூறினார். எனக்கு புரிந்து விட்டது. உடனே உங்களுடைய நோக்கம் என்ன..? என்று எனக்கு புரிகிறது. ஆனால், நீங்கள் நினைக்கக்கூடிய பெண் நான் கிடையாது என்று கூறினேன்.

உடனே, சாரி மேடம் இனிமேல் உங்களிடம் இப்படி கேட்க மாட்டேன். நிகழ்ச்சி தொடர்பாக மட்டும் பேசுவேன் என்று கூறிவிட்டு அந்த நபர் தன்னுடைய இணைப்பை துண்டித்து விட்டார் என பேசி இருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஒருவேளை நான் பட வாய்ப்புக்காக இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களில் ஈடுபட்டிருந்தால் எனக்கு ஹீரோயினாகவே நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கும். பல நூறு படங்களில் நடித்திருப்பேன்.

அப்படி வரக்கூடிய படம், பணம், புகழ் எனக்கு தேவையே கிடையாது. எனக்கு எளிமையாக வாழ்க்கை நடத்துவதற்கு என்ன தேவையோ..? அது சீரியல்களில் நடிப்பதன் மூலமே எனக்கு கிடைக்கிறது.

அதுவே நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கையாக நான் பார்க்கிறேன் என பதிவு செய்திருந்தார் தேவி பிரியா.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. 

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top