விஜயகாந்த் சத்யராஜ் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதே காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்தான் நடிகர் சரத்குமார்.
இவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி அதே காலகட்டத்தில் பெரிய நடிகர்களாக இருந்தனர். சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் மூவருமே போட்டி நடிகர்களாக இருந்து வந்தாலும் அதே சமயத்தில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
தேம்பி தேம்பி அழுத சரத்குமார்
ஆரம்பத்தில் சரத்குமார் வில்லனாக நடித்தாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு நிறைய படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
முதன்முதலாக கண்சிமிட்டும் நேரம் என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார் சரத்குமார். அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. 1990ல் மட்டும் 15 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் சரத்குமார்.
சமாதானப்படுத்த முடியல
1990 இல் அவரது நடிப்பில் வந்த புலன்விசாரணை திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற படம் ஆகும். இத்தனைக்கும் அந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். அதே வருடத்தில் அவர் ஹீரோவாக நடித்தும் நிறைய திரைப்படங்கள் வெளிவர துவங்கின.
இப்படியாக சினிமாவில் வளர்ச்சியை பெற்றார் சரத்குமார். இதனை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டும் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. இதனால் ஒரே நாளில் நிறைய திரைப்படங்களில் வரிசையாக மாறி மாறி நடிக்க வேண்டிய சூழ்நிலை சரத்குமாருக்கு இருந்தது.
இந்த நிலையில்தான் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சரத்குமாருக்கு கிடைத்தது. சேரன் பாண்டியன் திரைப்படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக சரத்குமார் இருந்தார்.
மக்கள் முன்பே நடந்த சம்பவம்
ஆனால் அவரால் தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க முடியாது என்கிற சூழ்நிலை இருந்தது. ஏனெனில் அதே காலகட்டத்தில் தொடர்ந்து வேறு படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் சரத்குமார். வைதேகி கல்யாணம், வசந்தகால பறவை மாதிரியான படங்களில் போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்ததால் சேரன் பாண்டியனில் முழுதாக நடிக்க முடியவில்லை.
இந்த விஷயத்தை அறிந்த கே.எஸ் ரவிக்குமார் சரத்குமாரை அழைத்து அவரை வைத்து மூன்றே நாட்களில் அவருக்கான அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்தார். அதற்கு பிறகு சேரன் பாண்டியன் படம் வெளியான பொழுது சரத்குமாரின் கதாபாத்திரம்தான் அதில் வெகுவாக பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது.
இந்த நிலையில் முதல் நாள் திரையரங்கில் சேரன் பாண்டியன் படத்தை பார்த்த சரத்குமார் அங்கேயே தேம்பி தேம்பி அழுததாக கூறுகிறார் கே.எஸ் ரவிக்குமார். நான் மொத்தமே வந்து மூன்று நாட்கள்தான் நடித்துக் கொடுத்தேன் ஆனால் என்னை கதாநாயகன் ஆக்கி இந்த படத்தை எடுத்திருக்கிறீர்களே என்று கூறி அவர் அழுததாக கே.எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார் .