மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்து உரை சேர்ந்தவர் மோனலிசா போன்ஸ்லே 16 வயது ஆகும் இவர் மகா கும்பமேளா நடந்த பிராக்யராஜ் பகுதியில் தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை மற்றும் பாசி மாலைகளை விற்றுக் கொண்டிருந்தார்.
அவருடைய அழகான கண்கள் மற்றும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு இதனால் கவரப்பட்ட அங்கிருந்த சிலர் அவரை வீடியோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர ஓவர் நைட்டில் ஒபாமா என்ற அளவுக்கு கிடுகிடுவென இணைய வட்டாரத்தில் பிரபலமானார் மோனலிசா.
இப்படி இணையத்தில் பிரபலமான இவரை விடுவார்களா யூடியூபர்கள்..? மளமளவென இவரை பேட்டி எடுக்கவும் வீடியோ எடுக்கவும் அவரை விடாமல் துரத்தி இருக்கிறார்கள்.
இதனால் கடுப்பான அவருடைய தந்தை இரவோடு இரவாக தன்னுடைய மகள் மோனலிசாவை தன்னுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார். இணைய பக்கங்களில் ப்ரவுன் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் திடீரென பிரபலமாகி இரவோடு இரவாக அந்த இடத்தை காலி செய்து கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்ப வைத்திருக்கிறார்கள் யூடியூபவர்கள்.
இதற்கு முக்கிய காரணம் அவர் ஒரு 16 வயதான பெண்தான் என்பதை கூட பார்க்காமல் அங்கு வந்த யூடியூபர்கள் சிலர் அவரிடம் எழுப்பிய கேள்விகள் தான் என்று கூறப்படுகிறது.
அந்த கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்..? அதற்கு என்ன பதில் கொடுக்க வேண்டும்..? என்று கூட தெரியாமல் இருந்த அந்த தன்னுடைய மகளை பார்த்து வேதனைப்பட்டு இருக்கிறார் அவருடைய தந்தை.
இந்த கொடுமையெல்லாம் ஆகாது எனக் கூறி அன்று இரவு மோனலிசாவை தன்னுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விவரம் இணைய பக்கங்கள் தீயாக பரவி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க விரைவில் பாலிவுட் திரைப்படங்களில் இவரை பார்க்கலாம் என்று பாலிவுட் திரை பிரபலங்கள் சிலரே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Street dogs are better than human beings 😑
Hence proved 🤡#monalisa #MahaKumbh2025 pic.twitter.com/SIVtySNFva— 𝑑𝑖𝑠𝑐𝑜𝑛𝑛𝑒𝑐𝑡 🚴 (@iamhemuk) January 21, 2025
மேலும், சில ஆசாமிகள் யூட்யூபர் என்ற பெயரில் அவரிடம் அத்து மீறிய காட்சிகளும் வைரலாகி வருகிறது.
Loading ...
- See Poll Result