Connect with us

சினிமா செய்திகள்

62 வயதிலும் அதே தோற்றம்.. தீயாய் பரவும் நடிகை மாதவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Published on : December 16, 2024 1:05 PM Modified on : December 16, 2024 1:05 PM

Madhavi, the beloved actress from yesteryear, is back in the spotlight, and this time it’s with some stunning new photos that are taking the internet by storm!

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை மாதவி இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக தில்லு முல்லு என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு திரையுலகினர் மத்தியில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம், காக்கி சட்டை உள்ளிட்ட இவருடைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

மேலும், இவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ராம் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டு தன்னுடைய குடும்பத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் நடிகை மாதவி.

தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நியூ ஜெர்சியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை மாதவியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் அப்போது பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறீர்கள் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Summary in English : Madhavi, the beloved actress from yesteryear, is making waves online with her latest photos that are going viral! Fans couldn’t be more excited to see her grace our feeds again.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா செய்திகள்

To Top