Connect with us

சினிமா செய்திகள்

15 வயசுலயே அதை பண்ணிட்டாங்க.. விஜய் கூட அப்படி சொன்னாரு.. ரகசியம் நடிகை ராசி மந்த்ரா..!

By Brindha IyerSeptember 29, 2024 12:55 PM IST

தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்காக நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றியும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வந்ததை அடுத்து அதனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் தங்களது நிலையை ஓபன் ஆக தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தளபதி விஜய் உடன் இணைந்து 15 வயதில் லவ் டுடே படத்தில் நடித்த நடிகை மந்த்ரா தனக்கு நேர்ந்த நிகழ்வினை ரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கும் விஷயம் அனைவரையும் பதற வைத்துள்ளது.

15 வயதிலேயே என்னை ஏமாத்திட்டாங்க..

அந்த வகையில் லவ் டுடே படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஓப்பனாக நடிகை மந்த்ரா அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்நிலையில் ஆரம்பத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று அழைத்த டைரக்டர் தன்னை ஏமாற்றி கேரக்டரை மாற்றிவிட்டதாக சொல்லி நான் அழுதேன்.

அப்போது தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்து வரும் இந்த நடிகை மந்த்ராவிற்கு தமிழில் அதிக அளவு பட வாய்ப்புகள் இல்லை. இவர் சிம்ரன், ரம்பா, தேவயானி வரிசையில் அறிமுகமான நடிகை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இவர் தான் பிறந்து ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்து விட்டதாகவும் தனது 14 வது வயதில் பிரியம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதாகவும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அருண் விஜய் நடித்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

லவ் டுடே படத்தில் நடந்ததை எமோஷனலாய் சொன்ன நடிகை..

அந்த வகையில் லவ் டுடே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து ஆரம்பத்தில் என்னிடம் கதை சொல்லும் போது நீங்கள் தான் அந்த படத்தின் நாயகி என்று சொன்னார்கள். ஆனால் என்னை ஏமாற்றி தளபதி விஜய்க்கு தோழியாக நடிக்க வைத்தது இன்று வரை நினைத்தாலும் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

இதைப் பற்றி நான் என் அப்பாவிடம் கூட சொல்லி அழுது இருக்கிறேன். மேலும் இந்த படத்தில் கடைசி வரை விஜய்க்கு தோழியாகவே காட்டி விட்டதாக சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறேன். எனினும் படம் வெளிவந்த பிறகு எனக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

இந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது இதில் என்னுடைய நடனத்தை விஜய் பாராட்டி இருக்கிறார். மேலும் 15 வயதில் இவ்வளவு அழகாக டான்ஸ் ஆடியிருக்கிறீர்கள் என்று கூறியதை அடுத்து அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

எனினும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்ற ஒரு மனவலி எனக்குள் உள்ளது. ஏனென்றால் விஜய் மிகச் சிறப்பாக டான்ஸ் ஆடுவார் அவரோடு ஒரு படத்தில் நடிக்க மாட்டோமா என்று நான் பலமுறை நினைத்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top