Connect with us

சினிமா செய்திகள்

பிரபாகரன் சீமான் புகைப்படம் அசலா..? போலியா..? உண்மை இதோ..!

By TamizhakamJanuary 20, 2025 1:54 AM IST

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக திராவிட இயக்கத்தினராலும், திராவிட கட்சிகள் மற்றும் திராவிட கட்சி தொண்டர்கள் ஆகியோரால் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான சீமான் கூறிய கருத்துக்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை நாடு முழுதும் ஏற்படுத்தி இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து சீமானுக்கு எதிராக திராவிட இயக்கத்தினர் மற்றும் திராவிட கட்சிகள் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

புகைப்பட சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. சீமான் மற்றும் பிரபாகரன் இருவரும் சந்தித்ததாகவும் அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதுதான் எனவும் பரவிய புகைப்படங்கள் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் என்ற நபர் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இவருடைய இந்த பேட்டிக்கு பிறகு சமூக வலைதளங்களில் சீமான் பிரபாகரன் சந்திப்பு மற்றும் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. மட்டுமில்லாமல் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கிண்டல், கேலி செய்து சமூக வலைதள பக்கங்களில் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீமான் அவர்கள் பிரபாகரன் அவர்களை சந்தித்தது உண்மைதானா..? என்று சில சம்பவங்கள் அடிப்படையில் இந்த பதிவை இங்கே எழுதி இருக்கிறோம்.

விமர்சனங்களும் விளக்கங்களும்:

சீமான் பிரபாகரன் சந்திப்பு பற்றி சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது மிகவும் காரசாரமாக விவாதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இது பற்றிய சர்ச்சைகளுக்கு சீமான் பலமுறை விளக்கம் அளித்திருக்கிறார். அந்த காணொளிக்கான லிங்க் இங்கே. https://www.youtube.com/watch?v=RGyof8ZtW14

பிரபாகரனை சந்தித்ததன் அடிப்படையில் சீமான் சில விஷயங்களை மிகைப்படுத்தி பேசி வருவதாக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இதை ஒட்டி சீமான் ஆதரவாளரும் சக சினிமா இயக்குனருமான பாரதிராஜா சீமான் பிரபாகரன் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது அதில் என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். அந்த வீடியோவிற்கான லிங்க் இதோ.https://www.youtube.com/watch?v=led09iRTNsk

இதே போல பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சீமானை விமர்சனம் செய்யும் வகையில் பேசி இருக்கிறார்.

மேற்கண்ட பதிவிற்கான ஆதாரம் : One India

கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் சீமானை விமர்சிக்கும் பலரும் அவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை நம்மால் கவனிக்க முடிகிறது. சில நிமிடங்கள் மட்டும் சந்தித்து விட்டு மிகைப்படுத்தி பேசுகிறார் என்பது பொதுவான விமர்சனமாக இருக்கிறது.

ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகக்கூடிய பதிவுகளை ஆராய்ச்சி செய்யும்போது பல்வேறு குழப்பங்கள் எழுகின்றன.

இன்று (ஜனவரி 20-ஆம் தேதி, 2025) இந்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று சங்ககிரி ராஜ்குமார் ஊடகங்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் தான் சங்ககிரி ராஜ்குமார்.

உயர வித்தியாசம்

புகைப்படங்களின் ஒருவருடைய உயரத்தை இன்னொரு ஒருவருடைய உயரத்தையும் ஒப்பிட்டு இது நிஜமாக இருக்க முடியாது என்ற ஒரு முடிவுக்கு வருகிறார்கள் சிலர். ஆனால், புகைப்படங்களில் சிலர் ஒல்லியாக இருக்கும்போது உயரமாக தோன்றுவதும்.. அதுவே உடல் எடை சற்று கூடி குண்டாகி விட்டால் உயரம் குறைந்தது போலவும் நம்முடைய கண்களுக்கு தோன்றுவது இயல்பு.. மேலும், கேமராவின் கோணமும் ஒருவரை உயரமாகவோம், குட்டையாகவோ காட்டும்.. அப்படித்தான் பிரபாகரன், சீமான் பற்றிய தோற்றப்பிழையும். எனவே, புகைப்படத்தில் வரும் உயர வித்தியாசத்தை பொருட்டாக எடுத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன், வைகோ மற்றும் திருமாவளவன் போன்ற தலைவர்களை சந்திக்கும் போது இருந்ததை விடவும் சீமானை சந்திக்கும் போது சற்று உடல் பருமனாக இருப்பதை கவனிக்க முடிகிறது.

கடைசியாக, சீமான் கடந்த 2009 ஆம் ஆண்டில் பிரபாகரனை சந்தித்தது பற்றி ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் ஆதாரத்தை இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.( https://www.vikatan.com/news/celebrity/41426–2 )

அதே நேரம், பிரபாகரனுடன் என்ன பேசினேன்.. என்று 2009-ம் ஆண்டு சீமான் அவர்கள் பேசிய விபரங்களுக்கும்.. சமீப காலமாக அவர் பேசக்கூடிய விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதை உணர முடிகிறது. அது மட்டுமில்லாமல் பிரபாகரன் குண்டாக இருந்ததை பற்றி அவரிடமே கேள்வி எழுப்பியதாக அந்த பேட்டியில் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில், இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி பெயர் வெளியிட விரும்பாத சில விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஈனப் போரில் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் fact crescendo என்ற வளைதளத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

அப்போது அவர்களுக்கு கிடைத்த பதில் என்னவென்றால்.. இது உண்மையான புகைப்படம் தான். அதில் சந்தேகம் இல்லை. வழக்கமாக அரசியல் பிரமுகர்கள் யாரும் பிரபாகரனை சந்தித்தால் அது பற்றி புகைப்படம் வீடியோவை விடுதலை புலிகளே அதிகாரப்பூர்வமாக படம் பிடித்து வெளியிடுவோம்.

ஆனால், சீமான் விஷயத்தில் அவர்கள் அப்படி செய்யவில்லை. அதற்கு காரணம் அங்கிருந்தவர்களுக்கே வெளிச்சம்.. எனவேதான் சிலர் இந்த புகைப்படங்களின் மீது சந்தேகம் இருப்பதாக பேசுகிறார்கள். ஒரு வேலை போர்க்களம் என்பதால் அதற்கான சூழல் ஏற்படாமல் போயிருக்கலாம்.

அத்துடன் பிரபாகரனை சந்தித்தபோது சீமான் ஒரு சினிமா இயக்குனராகவே சென்று இருந்தார். ஒரு அரசியல்வாதியாகவோ ஒரு இயக்கத்தின் தலைவராகவோ செல்லவில்லை. அன்றைய தினம், இயக்குனர் பாலு மகேந்திராவை பார்க்கவே பிரபாகரன் விரும்பினார்.

அவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக சீமானை அழைத்து சென்றார்கள். ஆனால், அன்று சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை. இது எங்களுக்கு தெரியும் என விடுதலைப் புலிகளின் போரில் பங்கேற்ரவர்கக் குறிப்பிட்டதாக அந்த தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குண்டான ஆதாரத்தை இந்த லிங்கில் நீங்கள் சென்று பார்க்கலாம். ( https://tamil.factcrescendo.com/factcheck-seeman-met-prabhakaran-or-not/ )

சீமான் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவைச் சேர்ந்த பலரையும் நேரில் வரவைத்து பிரபாகரன் பேசியிருக்கிறார். தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்த இயக்குனர் மகேந்திரன் கூட சினிமா பணியின் நிமித்தமாக கடந்த 2002-ம் ஆண்டு பிரபாகரனை சந்தித்து நேரில் பேசி இருக்கிறார் என்பதை இங்கே காணலாம்.

இப்படியாக நாம் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு ஒரு விவரம் தெரிய வருகிறது. அது என்னவென்றால் சீமான் அவர்கள் பிரபாகரனை சந்தித்திருக்கிறார் அது உண்மை. அப்போது புகைப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உண்மை. இது தீர்க்கம்.

பதிவின் முடிவில் சில முக்கியமான விஷயங்களை மீண்டும் பார்த்து விடலாம்.

  1. சீமான் பிரபாகரன் சந்திப்பு 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்ததாக சீமானை ஊடகங்களில் கூறியிருக்கிறார்.
  2. பிரபாகரனை சந்தித்தபோது என்னென்ன விஷயங்கள் பற்றி பேசினேன் என்று 2009 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் கூடத்திற்கு சினிமா சீமான் விரிவான பேட்டி கொடுத்திருக்கிறார்.
  3. 2009 ஆம் ஆண்டில் சீமான் ஊடகங்களில் அளித்த பேட்டிக்கும் சமீப காலமாக அவர் பேசி வரக்கூடிய விஷயங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.
  4. அரசியல்வாதிகளை அவர் விமர்சிக்கின்றார். எனவே சக அரசியல்வாதிகளின் அவரை விமர்சிக்கும் பொருட்டு இப்படியான விஷயங்களை பேசுகிறார்கள்.
  5. ஆனால் அவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை இது போட்டோஷாப் செய்த புகைப்படம் சீமான் மக்களை ஏமாற்றுகிறார் என்பது தவறான தகவல்.
  6. குறிப்பிட்ட அந்த இயக்குனர் ( சங்ககிரி ராஜ்குமார் ) நான்தான் அந்த படத்தை எடிட் செய்தேன் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்று நாம் தமிழர் சார்பாகவோ.. அல்லது சீமான் சார்பாகவோ அவர் மீது வழக்கு தொடர்ந்து அவரிடம் முறையாக விசாரணை நடத்தினால்தான் இது குறித்த உண்மை தன்மை தெரிய வரும்.

இது குறித்து நாம் தமிழர் மற்றும் திராவிட கட்சிகள் தொண்டர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.

அதில் திராவிட கட்சி தரப்பில் இருப்பவர்கள், சீமான் ஒரு போலியானவர், தவறான தகவல்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதையே அவருடைய வாடிக்கை அதேபோலத்தான் ஈ.வெ.ராமசாமி (பெரியார்) விஷயத்திலும் அவர் கூறிக் கொண்டிருக்கிறார். சீமான் என்றாலே ஒரு பொய்யர் என்று விவாதத்தை முன்வைக்கின்றனர்.

மறுபக்கம் நாம் தமிழர் கட்சியினர், திராவிட கட்சிகளுக்கு இது பழக்கமான ஒரு விஷயம்தான். கேள்விக்கு பதில் இல்லை என்றால் கேள்வி கேட்டவனை அடிப்பது தான் அவர்களின் மரபு. தங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்றால் அந்த குற்றச்சாட்டு குறித்து வாயை திறக்க மாட்டார்கள். ஆனால், அந்த குற்றச்சாட்டை வைத்தவரை பொதுவெளியில் களங்கப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபடுவார்கள். அது போல தான் சீமான் பெரியார் குறித்து பேசிய விஷயங்களுக்கு எந்த விளக்கமும் கொடுக்காமல்.. வெறுமனே அவருக்கு கண்டனம் மட்டும் தெரிவித்து விட்டு.. அடுத்த வேலையாக சீமானை தனிப்பட்ட முறையில் தாக்கும் வேலையை தொடங்கி விட்டார்கள்.

இவற்றுக்கெல்லாம் ஒரு போதும் அஞ்சும் நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று பதில் கொடுத்து வருகிறார்கள். இதனால் இந்த விவாதம் இணைய பக்கங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top