90’ஸ் கிட்ஸ்கள் கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்ததும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தவறாமல் ஒளிபரப்பாகக் கூடிய ஒரு பாடல் வாமனன் படத்தில் இடம் பெற்ற ஏதோ செய்கிறாய் பாடல். அந்த பாடலுக்கு அடுத்தபடியாக நாணயம் படத்தில் இடம்பெற்ற நான் போகிறேன் மேலே மேலே என்ற பாடலும் மிகவும் பிரபலமானது.
இந்த பாடலில் தோன்றி இருக்கக்கூடிய நடிகையின் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், நான்கு படங்களில் நடித்த அவர் அதன் பிறகு ஆள் காணாமல் போய்விட்டார்.
அவர் இப்போது எங்கே இருக்கிறார்..? அவருடைய பெயர் என்ன..? அவருக்கும் நடிகை குஷ்புவுக்கும் என்ன உறவு..? உள்ளிட்ட சுவாரஸியமான பல தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இவருடைய உண்மையான பெயர் ராகினி என்பதாகும். சினிமாவில் நடிப்பதற்காக ரம்யா ராஜ் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார். தமிழில் மட்டும் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவருடைய முதல் திரைப்படம் இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்திருந்த «சண்ட» ஆகும். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து உன்னை, நாணயம் என இரண்டு தமிழ் படங்களிலும் செவன்ஸ் என்ற ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
மலேசியாவை சேர்ந்த மாடல் அழகியான இவர் சுந்தர் சி கையில் எப்படி சிக்கினார்.? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். நடிகை ரம்யா ராஜ் குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஆவார்.
எப்படி என்றால் நடிகை குஷ்புவின் சகோதரர்.. நடிகை ரம்யா ராஜின் சகோதரி.. இருவரும் கணவன் மனைவி ஆவர்கள். இதன் மூலமாக நடிகை குஷ்பூ உடன் நெருக்கமான உறவினரானார் நடிகை ரம்யா ராஜ்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது .அந்த வகையில் குஷ்புவின் கணவரான இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான சண்ட திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.
2008 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து 2009, 2010, 2011 என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்த இவர் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் நடிகை ரம்யா ராஜ். இதனால், இவரை பற்றி எந்த அப்டேட்டும் ரசிகர்களுக்கு தெரிவதில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் தான் கர்ப்பமாகி இருக்கிறார். இவருடைய வளைகாப்பு விழாவில் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை நம்முடைய தமிழகம் தளத்தில் மட்டும் காணலாம்.
Loading ...
- See Poll Result