Connect with us

சினிமா செய்திகள்

நான் அதை பண்ணா கூட அவருக்கு தெரியும்.. இந்த மாதிரி ஒரு கேரக்டரை பக்காவே இல்ல.. ராமராஜன் குறித்து நளினி..!

By TamizhakamFebruar 4, 2025 5:32 PM IST

பிரபல நடிகை நளினி, தனது முன்னாள் கணவரும் நடிகருமான ராமராஜன் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவர்களின் உறவு, விவாகரத்து மற்றும் தற்போதைய நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

காதல் திருமணம் மற்றும் விவாகரத்து

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நளினியும் ராமராஜனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ராமராஜனுடன் நெருங்கிய உறவு

நளினி தனது பேட்டியில், «நான் எப்போதும் ராமராஜன் அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அப்போது எங்களுடைய வீட்டில் நடக்கக்கூடிய சுப நிகழ்ச்சிகளுக்கு வருவார். அப்போதெல்லாம் நிறைய பேசுவோம்.

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு ராமராஜன் தான் கணவராக வர வேண்டும் என பிரார்த்தனை செய்வேன். அவரை மாதிரி ஒரு கேரக்டரை இதுவரை நான் யாரிடமும் கண்டதில்லை. ஏனென்றால், நான் இப்போது தும்ப போகிறேன் என்று கூட அவருக்கு தெரியும். அந்த அளவுக்கு என்னுடன் நெருக்கமாக என்னை புரிந்து நடந்து கொண்டவர்,» என்று கூறினார்.

விவாகரத்துக்கான காரணம்

«விவாகரத்து செய்து விட்டீர்களே,» என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நளினி பதிலளிக்கையில், «உண்மைதான். அவருக்கும் எனக்கும் ஜாதகத்தில் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் இருவரும் தெரிந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் சில அசம்பாவிதமான விஷயங்கள் நடக்கும் என கூறினார்கள்.

அதுபோலவே நடந்தது. அதனால் தொடர்ந்து சேர்ந்து இருக்க வேண்டாம் என முடிவு எடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். விவாகரத்து செய்யும் போது கூட நான் அவருடைய கையை பிடித்துக் கொண்டுதான் இருந்தேன். எந்த சங்கடமும் இல்லாமல் எங்களுடைய குழந்தைகளுக்கு நாங்கள் இருவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பிரிந்து வாழ்ந்து வருகிறோம்,» என்று கூறினார்.

நளினியின் இந்த பேட்டி, ராமராஜன் உடனான அவரது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதையும், விவாகரத்துக்கான காரணத்தையும் வெளிப்படுத்துகிறது. ஜாதகத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக இருவரும் பிரிந்தாலும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு, நல்ல நண்பர்களாகவும், அக்கறையுள்ள பெற்றோர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top