Connect with us

சினிமா செய்திகள்

ச்சைக்.. கன்றாவி.. தனுஷிடம் NOC பெற நயன்தாரா பார்த்த மட்டமான வேலை..! காது கூசுதுடா சாமி..!

By TamizhakamJanuar 28, 2025 8:02 PM IST

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இடையே நிலவும் பிரச்சனை பலருக்கும் தெரியும். ஆனால், அந்த பிரச்சனைக்கான பின்னணி மற்றும் அதன் ஆழம் பலருக்கும் தெரியாது. «நானும் ரௌடி தான்» திரைப்படத்தின் தயாரிப்பு, காதல், பணமோகம், மற்றும் காப்புரிமை சர்ச்சை ஆகியவை இந்த பிரச்சனைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

தயாரிப்பு செலவில் குளறுபடி

«நானும் ரௌடி தான்» திரைப்படத்தை தயாரிப்பதற்காக விக்னேஷ் சிவன் தனுஷிடம் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் கேட்டிருக்கிறார்.

ஆனால், நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்ட விக்னேஷ் சிவன், படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டால் நயன்தாராவைத் தொடர்ந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற பீதியில், ஏற்கனவே படமாக்கிய காட்சிகளை இன்னும் மெருகேற்றுகிறேன் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் படமாக்கி நாட்களை கடத்திச் சென்றிருக்கிறார். இதன் மூலம் நயன்தாராவுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.

தன்னுடைய காதல் கைகூடுவதற்காக தனுஷின் பணத்தை எடுத்து செலவு செய்து கொண்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஒரு கோடி, இரண்டு கோடி, நான்கு கோடியாக ஆரம்பித்து நான்கு கோடி ரூபாய் என்ற பட்ஜெட்டை 17 கோடி வரை இழுத்து விட்டு இருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன பட்ஜெட்டை விடவும் கிட்டத்தட்ட 13 கோடி அதிகமாக செலவு செய்திருக்கிறார். கடைசியாக இன்னும் இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என கேட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இதனால் கடுப்பான நடிகர் தனுஷ் இனிமேல் நான் படத்திற்கு பணம் கொடுக்க மாட்டேன் நான் இந்த படத்தை ட்ராப் செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

சொந்த பணத்தில் படம் வெளியீடு

ஆசை ஆசையாய் படத்தை எடுத்து, படம் எடுக்கும் வாக்கில் நயன்தாராவை காதலித்து கடைசியாக படம் வெளியாகாமல் போனால் பிரச்சனை ஆகிவிடும் என்ற பயந்து போன விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுடைய சொந்த பணம் இரண்டு கோடி ரூபாயை போட்டு «நானும் ரௌடி தான்» படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு படம் வெளியாகி இருக்கிறது.

இப்படி படத்தை தனுஷ் இருக்கு கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் அதிகமாக செலவு அளித்துவிட்டது தான் செலவை இழுத்து விட்டது தான் அந்தப் படத்தில் உரிமையை நயன்தாராவிற்கு கொடுக்காமல் தனுஷ் மறுப்பதற்கு காரணம். பொறுங்க பொறுங்க… இனிமே தான் கதையே ஆரம்பிக்குது.

காப்புரிமை சர்ச்சை

இதற்கு பின்னால் இன்னொரு காது கூசும் சம்பவங்கள் இருக்கிறது. அது என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அது என்ன விவகாரம் என்றால் தனுஷுக்கும் தங்களுக்கும் பிரச்சனையாகி விட்டது. இனிமேல் அவரிடம் அனுமதி என்று கேட்டால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்பதால் குறுக்கு புத்தியில் சில திருட்டு வேலைகளை செய்திருக்கிறார்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

நடிகர் தனுஷின் உதவியாளரும் விக்னேஷ் சிவனும் நல்ல நண்பர்கள். இந்த நட்பை பயன்படுத்திக் கொண்டு வொண்டர்பார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரியில் இருந்து தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அந்த அனுமதியை கொடுத்தது போல NOC அனுப்பி விடுமாறு நடிகர் தனுஷின் உதவியாளரும் தன்னுடைய நண்பருமான அந்த நபரிடம் விக்னேஷ் சிவன் குறுக்கு வழியில் வேலை காட்டி இருக்கிறார்.

ஆனால், அந்த நண்பரோ.. இது தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்டது. இதில் என்னால் எந்த முடிவு எடுக்க முடியாது. தனுஷ் சாரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அனுப்புகிறேன். ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறியிருக்கிறார்.

இப்படி குறுக்கு வழியில் திருட்டுத்தனமாக அனுமதி பெற முயற்சித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறார். அதன் பிறகு நயன்தாரா விக்னேஷ் இவனும் எத்தனையோ பிரபலங்களை வைத்து தனுஷிடம் கெஞ்சியும் தனுஷ் NOC கொடுக்கவே முடியாது என்று மறுத்திருக்கிறார். இதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

இந்த பிரச்சனைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top