நடிகை நகிலா விமல் கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற வாழை திரைப்படத்தில் பூங்கொடி இந்த கதாபாத்திரத்தில் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருந்தார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் கூறியதாவது, பொதுவாக நான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை விரும்புவதில்லை.
நான் நடித்துள்ள படங்கள் வெளியாகும் போது படத்தின் விளம்பரத்திற்காக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்கு நான் சம்மதம் தெரிவிப்பேன். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை யாராவது பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக நான் மறுத்து விடுவேன்.
அதற்கு என்ன காரணம் என்றால்.. அடிக்கடி பேட்டிகளில் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசும்போது.. ஒரு கட்டத்தில் நாம் பேசிய விஷயங்களை மட்டுமே வைத்து நாம் இப்படித்தான் என்று நம்மை எளிமையாக Judge செய்து விடுவார்கள்.
ஒரு பேட்டி என்றால் அதிகப்பட்சம் 15 நிமிடம் 30 நிமிடம் இருக்குமா.. அதில் வெகு சில கேள்விகள் எழுப்பப்படும்.. அதற்கு நான் பதில் கொடுக்கிறேன்.. இப்படியே ஒரு பத்து பேட்டிகள் நான் கொடுத்தால் கிட்டத்தட்ட என்னைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்தும் வந்துவிடும் வகையிலான விஷயங்களை நான் பொதுவெளியில் வைத்து விடுவேன்.
அது என்னைப் பற்றி முழுமையாக தெரியாத நபர்கள் என்னை எளிமையாக எடை போடுவதற்கு வழி வகுத்து விடும். இன்னும், வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் என்னைப்பற்றி இருக்கக்கூடிய ரகசியங்களை விஷயங்களை பேட்டி மூலம் பொது வெளியில் நான் வைத்து விடுவது என்பது நான் ஆடை இல்லாமல் நிற்பதற்கு சமம்.. அதற்கு நானே வழி ஏற்படுத்தி கொடுத்தது போல் ஆகிவிடும் என்பதால் நான் தனிப்பட்ட முறையில் பேட்டிகள் கொடுப்பதில்லை.
படம் சம்பந்தமான பிரமோஷன் பேட்டிகள் என்றால் தயங்காமல் நான் செய்வேன். ஏனென்றால், அது படத்திற்கு ஒரு பக்கபலமாக இருக்கும். அந்த படத்தை நிறைய ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
Loading ...
- See Poll Result