nivetha pethuraj
Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. நிவேதா பெத்துராஜ்..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

--- Advertisement ---

ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

இதில், ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாத அளவிற்கு சல்வாரிலும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது, வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஹாரர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ள அம்மணி முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே, டிக் டிக் டிக் படத்தில் மோனோகினி ரக நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் அம்மணி. இந்நிலையில், தற்போது டூ பீஸ் உடைக்கும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இந்த வெப் சீரிஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. டூ பீஸ் உடையில் நிவேதா பெத்துராஜை பார்க்க ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இளம் ரசிகர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---