Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதன் முறையாக நீச்சல் உடையில் பனிமலர்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் ( Panimalar Panneerselvam ) . பொதுவாக சமூக வலைத்தளங்களில் இருக்கும் பெரும்பாலானோர் ஆரோக்கியமான விவாதம் நடத்தாமல் அருவருப்பான வார்த்தைகள், புகைப்படங்கள், கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பெண் பத்திரிகையாளரும், பெரியாரியவாதியுமான பனிமலர் என்பவருக்கு சில மர்ம நபர்கள் ஆண்கள் ஆடை இன்றி இருக்கும் படங்களை அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பனிமலர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆண்கள் ஆடையின்றி இருக்கும் படங்களை எனக்கு அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன் அதற்கு, விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆனால், உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது. அதைத்தாண்டி, தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை.
ஒழுக்கமும், நற்செயல்கள் மட்டுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஒருபோதும் ஈர்க்காது என்று பதிவு செய்திருந்தார்.
சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு தன்னை பின்தொடர்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டு கொள்ளை அழகில் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளார் அம்மணி.
