“நயன்தாரா தனுஷ் சண்டை இப்படி இருக்கிறது..” அதை ரசிக்கிறேன்.. நானும் ரௌடி தான் நடிகர் பேச்சு..!

Nayanthara beyond the fairy tale என்ற ஆவணப்படுத்தி ஏற்பட்ட நயன்தாரா தனுஷ் சர்ச்சையை மையமாகக் கொண்டு இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்த பதிவு. 

லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் ஆவண திரைப்படம் ஒன்று நெட்பிளக்ஸில் அண்மையில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்தது.

இந்த ஆவணத் திரைப்படத்தில் நயன்தாரா திரை உலகில் அடி எடுத்து வைத்தது முதல் அவர் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வகையான விஷயங்களை வலியுறுத்த கூடிய வகையில் இந்த படம் அமைந்திருந்தது என்று சொல்லலாம். 

“நயன்தாரா தனுஷ் சண்டை இப்படி இருக்கிறது..” அதை ரசிக்கிறேன்..

அந்த வகையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு இணைந்து பணி புரிந்த திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் சில காட்சிகள் இந்த ஆவண திரைப்படத்தில் இடம் பிடித்ததை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி பெறாமல் இதை வெளியிட்டதாக விஷயங்கள் கசிந்தது. 

அதை அடுத்து படத்தின் டீசருக்கே எழுந்த சர்ச்சைகளை அடுத்து நடிகர் தனுஷ் அதற்கு நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் விட்டதாக இணையத்தில் செய்தி வெளிவந்தது. 

இதைத்தொடர்ந்து காண்டாகிப்போன நடிகை நயன்தாரா தனுஷ் திரையுலகில் தனது தந்தை மற்றும் அண்ணன் மூலம் தான் இந்த லெவலில் வளர்ந்திருக்கிறார் என்பது போன்ற பல விஷயங்களை போட்டு புட்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

மேலும் அவர் நஷ்ட ஈடு கேட்ட விஷயத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்ததோடு மட்டுமல்லாமல் அவர் மீது கோபமாக பல்வேறு விஷயங்களை பேசினார். 

இதைத்தொடர்ந்து இவரது பிறந்த நாள் அன்று இவரது ஆவண திரைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. 

நானும் ரௌடி தான் நடிகர் பேச்சு..

இந்த நிலையில் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமண விழாவிற்கு தனுஷ் மற்றும் நயன்தாரா சென்ற சமயத்தில் இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. 

இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் நடித்திருந்த நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபனிடம் இவர்கள் இருவரது சண்டை குறித்தும் கேள்வியை முன் வைத்தார்கள்.

அந்தக் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நடிகர் பார்த்திபன் இவர்கள் இருவரின் சண்டை இந்தியாவில் கிரிக்கெட் மேட்ச் விளையாடும் இந்திய அணியை போன்றது அதை நான் ஒரு பார்வையாளராகத்தான் பார்க்கிறேன் என்று தன் பாணியில்  பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

Summary in English: In a recent chat, Parthiban opened up about the buzz surrounding the clash between Dhanush and Nayanthara. If you’ve been following the Tamil film industry, you know that these two stars have a massive fan following, and their movies often create quite a stir. Parthiban shared his thoughts on how this showdown could impact the box office and what it means for fans of both actors.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam