Connect with us

சினிமா செய்திகள்

திரிஷா எல்லாம் ஓரமா போ.. உதட்டை சுவைப்பதில் Ph.D வாங்கிய தளபதி69 ஹீரோயின்.. வைரல் வீடியோ..!

Published on : January 31, 2025 5:15 PM Modified on : January 31, 2025 5:15 PM

நடிகை பூஜா ஹெக்டே, தொடர் தோல்விகளுக்குப் பிறகு தற்போது “தேவா” படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். ஷாகித் கபூருடன் இணைந்து அவர் நடித்துள்ள “தேவா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, பூஜா ஹெக்டே மற்றும் ஷாகித் கபூரின் லிப் லாக் முத்தக் காட்சி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

முத்தக் காட்சிகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும்

காலம் மாறிவிட்டது, சினிமா தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்பதை இயக்குநர்களும், நடிகர்களும் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். முத்தக் காட்சிகள் என்பது தற்போது திரைப்படங்களில் சாதாரணமாகிவிட்டது. குஷி படத்திலேயே தமிழில் லிப் லாக் முத்தக் காட்சிகள் சூடுபிடிக்கத் தொடங்கின.

லியோ படம் வரை விஜய் முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தளபதி 69 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகருடன் வாயோடு வாய் வைத்து முத்தமிடும் காட்சி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

ஆரம்பமே வெற்றி

அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பல பெரிய பட வாய்ப்புகள் குவிந்தன. பிரபாஸின் ராதே ஷ்யாம், ராம் சரணுடன் ஆச்சார்யா, விஜய்யுடன் பீஸ்ட், சல்மான் கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என அவர் நடித்த 4 பெரிய படங்கள் தோல்வியைத் தழுவின.

அதன் காரணமாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஆரம்பமே ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த தேவா படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

வைரல் லிப் லாக் காட்சி

லியோ படத்தில் கடைசியாக லிப் லாக் சீனில் விஜய் நடித்த நிலையில், அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் லிப் லாக் காட்சி பூஜா ஹெக்டேவுடன் இருக்குமா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அரசியல் இமேஜுக்காக விஜய் அப்படி நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

சிட்டாடல் வெப்சீரிஸில் வருண் தவான் மடிமீது ஏறி அமர்ந்து சமந்தா கொடுத்த லிப் லாக் முத்தத்தை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த வரிசையில் பாலிவுட்டுக்கு சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே நடிகர் ஷாகித் கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்துள்ள சீனை ரசிகர்கள் தியேட்டரில் இருந்தே வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். இந்த சீனை பார்க்கவே பாலிவுட் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்துவிடுவார்கள் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டேவுக்கு பொன்னான ஆண்டு?

இந்த ஆண்டு பூஜா ஹெக்டேவுக்கு பொன்னான ஆண்டு என்று தான் சொல்லவேண்டும். இந்தியில் தேவா படம் ஹிட் அடித்துவிட்டால் அடுத்து தமிழில் சூர்யாவுடன் ரெட்ரோ மற்றும் தளபதி விஜய்யுடன் ஜன நாயகன் என 2 படங்களிலும் அவர் தான் ஹீரோயின்.

பூஜா ஹெக்டேவின் “தேவா” திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது லிப் லாக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வரும் காலங்களில் அவர் மேலும் பல வெற்றிப் படிகளில் ஏறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More in சினிமா செய்திகள்

To Top