எம்.ஜி.ஆர் கையால் தங்க மோதிரம் பரிசாக பெற்றவர்.. ஜெயலலிதா அவர்களால் சினிமாவை துறந்தவருமான நடிகர் ராஜீவ் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமான தகவல்களை பார்க்கலாமா..? நடிகை ராஜீவ் மதுரையில் பிறந்தவர். இவரது தந்தை பாலசுப்பிரமணிய முதலியார் பெங்களூரில் உள்ள இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள்.
ராஜீவ் தனது பள்ளிப்படிப்பை பெங்களூரில் உள்ள ஐ. டி. ஐ வித்யா மந்தீர் பள்ளியில் முடித்தார். பெற்றோரின் இறப்புக்குப் பிறகு, ராஜீவ் முதலில் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் அவரது சகோதரர்களின் வற்புறுத்தலால் ராணி என்பவரை மணந்தார். நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த ஆன்மீக வாதியாகவும் விழங்கிய இவர் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி ஆகிய தெய்வங்களின் தீவிர பக்தராவார்.
அதன் அடையாளமாக தன்னுடைய மகளுக்கு மீனா காமாட்சி என்று பெயர் சூட்டி அகம் மகிழ்ந்தார். மேலும், இவருக்கு, கிரண் சூர்யா என்ற மகனும் உள்ளனர்.
திரைப்பட வாழ்க்கை:
ராஜீவ் திரைப்படங்களில் நடிப்பதற்காக கலைக்காணலுக்கு விண்ணப்பித்தார். ஆரம்பத்தில் பல போராட்டங்களையும், நிராகரிப்புகளையும் சந்தித்த அவர், வாய்ப்புகள் கிடைக்காததால் தாஜ் கோரமண்டல் விடுதியில் பணியாளராகப் பணியாற்றினார்.
அங்கு நடந்த ஒரு போட்டியில் நடனமாடியதற்காக முதல் பரிசு பெற்றார். அதன் பிறகு நண்பர்களின் வற்புறுத்தலால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார்.
அவர் தனது வகுப்புத் தோழரும், தெலுங்கு நடிகருமான ராஜேந்திர பிரசாத்தை ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்தார். அங்கு மலையாள நடிகர் ரவீந்திரன், ராஜீவைப் பார்த்து «ஒரு தலை ராகம்» படத்தில் தனக்குப் பின்னணி குரல் கொடுக்கச் சொன்னார்.
ராஜீவ் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். அந்தப் படத்தின் இயக்குனர் டி. ராஜேந்தர், ராஜீவை பின்னணி குரல் கலைஞராகத் தேர்ந்தெடுத்தார். பின்னர் «வசந்த அழைப்புகள்» படத்திலும் ரவீந்திரனுக்காக பின்னணி குரல் கொடுத்தார்.
டி. ராஜேந்தர் தனது «இரயில் பயணங்களில்» படத்தில் ராஜீவுக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். பின்னர் «பாலைவனச்சோலை» படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்தார்.
முக்கிய திரைப்படங்கள்:
ராஜீவ் பல தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில குறிப்பிடத்தக்கவை:
தமிழ்: முள் இல்லாத ரோஜா (அறிமுகப் படம்), பாலைவனச்சோலை, இரயில் பயணங்களில்
மலையாளம்: உஸ்தாத், எஃப். ஐ. ஆர், சத்யம், கலெக்டர்
மேலும், பல படங்களில் எதிர்மறை மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பின்னணி குரல் கலைஞர்:
ராஜீவ் ஒரு திறமையான பின்னணி குரல் கலைஞரும் ஆவார். «ஒரு தலை ராகம்» போன்ற படங்களில் ரவீந்திரனுக்கு குரல் கொடுத்துள்ளார்.
ராஜீவ் ஒரு பல்துறை நடிகர். கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும், அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று பலர் கருதுகின்றனர்.
ஆரம்பத்திலிருந்து ஆன்மீகத்தின் மீது அதீத நாட்டத்துடன் இருந்திருக்கிறார் நடிகர் ராஜீவ். மறுபக்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பள்ளிக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருக்கிறது அதனை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சத்துணவு திட்டத்தை அறிவித்த போது அப்போது இருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் அவரை கிண்டல் செய்தன.. ஆனால், ஒட்டு மொத்த நாடும் எம்ஜிஆரின் திட்டத்தை இருகரம் கூப்பி வரவேற்றது.
மாணவர்களின் உணவு தேவைக்காக பலரும் நன்கொடை கொடுக்க முன்வந்தனர். அந்த நேரத்தில் இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கங்கை அமரன் அவர்களுடன் சேர்ந்து தமிழக முழுதும் இசை கட்சிகளை நடத்தினார் நடிகர் ராஜு.
அதன் மூலம் வந்த லாபத்தை ஒட்டுமொத்தமாக சத்துணவு திட்டத்திற்காக கொடுத்தார். இவருடைய இந்த செயலை பார்த்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வியந்து போனார். உடனே ராஜீவை அழைத்த எம்.ஜி.ஆர் அவரை பாராட்டியதுடன் மட்டுமில்லாமல் அவருக்கு தன்னுடைய சொந்த செலவில் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்வித்தார்.
இப்படி சிறந்த ஆன்மீகமாதியாகவும், சிறந்த நடிகராகவும், சிறந்த பொதுநலவாதியாகவும், அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் துவண்டு போனார்.
வாழ்க்கையில் பிடிப்பற்ற ஒரு நிலைக்கு சென்றார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். போதும்.. என்னடா வாழ்க்கை இத்து.. இதற்காக நாம் ஏன் ஓட வேண்டும்.. என சினிமாவை விட்டு விலகி காலையில் எழுந்தால் உடற்பயிற்சி அளவான சாப்பாடு.. மாலையில் நடை பயிற்சி.. என ஆரோக்கியமான சந்தோஷமான தனி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சென்னை சாலிகிராமம் பகுதியில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் விரைவில் தயாரிப்பாளர் என்ற ஒரு கோணத்தில் சினிமாவில் மீண்டும் இயங்க திட்டமிட்டு இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் போற்றும் வெள்ளி விழா நாயகர் ராஜீவ் போன்ற மனிதர்களை அவர்களுடைய வாழ்க்கையும் தொழிலும் சிறக்க எல்லோரும் ஒன்றாக வாழ்த்துவோம்.
Loading ...
- See Poll Result