actor rajinikanth apollo october october

சற்று முன் : ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!

ரஜினிகாந்த் உடல்நிலை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன், கூலி என இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவரம் அறிந்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த்துக்கு அடிவயிற்றில் இருக்கும் வீக்கம் ஒன்றை சரி செய்வதற்கான சிகிச்சைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திடீரென நடந்த விஷயம் அல்ல. ஏற்கனவே மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் திட்டமிடப்பட்டு நடந்த விஷயம் தான்.

actor rajinikanth apollo october october

ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவுகள் எதுவும் இல்லை. அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் அடிவயிற்றில் இருக்கக்கூடிய வீக்கத்தை சரி செய்வதற்கான சிகிச்சை தான் மருத்துவர்கள் கொடுக்க இருக்கிறார்கள்.

இதற்காக ரஜினிகாந்த் மூன்று அல்லது நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பார். அதன் பிறகு வீடு திரும்புவார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதாக வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையையும் கிடையாது.

actor rajinikanth apollo october october

அடிவயிற்றில் இருக்கக்கூடிய வீக்கத்தை சரி செய்யும் முன்பு உடலில் சில மருத்துவர் ஆய்வுகளை செய்ய வேண்டி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்துக்கு இதய பரிசோதனையும் செய்ய இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு இதயத்தில் பிரச்சனை என்று தகவல்கள் யூகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன தவிர இதய பிரச்சினை இருக்கிறது என்பதில் எந்த உண்மையுன் இல்லை என்றும் விவரம் அறிந்து வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

actor rajinikanth apollo october october

தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய செய்தி அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.

ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று அவர் வீட்டு திரும்ப வேண்டும் என்று பலரும் தங்களுடைய விருப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

--- Advertisement ---

Check Also

lokesh kanagaraj ajith october october

அஜித்தை வைத்து படம் எடுக்குறேன்.? லோகேஷ் கொடுத்த அப்டேட்.. அப்புறம் என்ன ஜாலிதான்.!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தில் துவங்கி …