அண்மை பேட்டி ஒன்றில் புஷ்பா 2 படத்தில் வாங்கிய சம்பளம் குறித்து ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புஷ்பா திரைப்படம் வெளிவந்து வசூலை வாரி குவித்த நிலையில் அந்த படத்தில் இரண்டாம் பகுதியில் மீண்டும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.
இதை அடுத்து பல படங்களில் கமிட் ஆகி இருக்கக்கூடிய இவர் பாலிவுட் படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகராக திகழும் தனுஷோடு இணைந்து சேகர் கமுலா இயக்கவுள்ள குபேரா படத்திலும் நடித்திருக்கிறார்.
புஷ்பா 2 ராஷ்மிதா மந்தனா வாங்கிய சம்பளம்..
தற்போது புஷ்பா 2 திரைப்படமானது டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள சூழ்நிலையில் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இவர்கள் சென்னை, ஹைதராபாத், கொச்சின் என அடுத்தடுத்து பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வரக்கூடிய நிலையில் நேற்று மும்பையில் நடந்த பிரமோஷன் கலை கட்டியது.
புஷ்பா 2 படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஸ்ரீ லீலா என பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமும் முதல் பாகத்தை விட அதிக அளவு வசூலை வாரி குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளி வந்து பரபரப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி படம் பார்க்கும் ஆசையை அதிகரித்து உள்ளது.
மும்பையில் நடைபெற்ற விழாவில் கவர்ச்சிகரமான உடையில் காட்சி அளித்த ராஷ்மிகாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்வியில் முக்கியமாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி தான் புஷ்பா 2 படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள்.
வாய்ப்பிளந்த ரசிகர்கள்..
ஏற்கனவே இந்திய அளவில் அதிக அளவு சம்பளம் வாங்க சொல்லப்படும் ரஷ்மிகா மந்தனா புஷ்பா படத்திற்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேஷனல் கிரஷ் ஆக விளங்கும் இவர் புஷ்பா ரெண்டு படத்திற்காக 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக விஷயங்கள் கசிந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் 10 கோடியா? என்று வாய்ப்பிளந்த இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த படமானது வரும் டிசம்பர் 5ஆம் தேதி சர்வதேச அளவில் 12000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது புஷ்பா படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் வசூலை தந்தது போல இந்த படமும் மிகப்பெரிய அளவு வசூலை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.
Summary in English: At the recent pre-release event for “Pushpa 2,” actress Rashmika Mandanna opened up about her salary, and fans were all ears! Known for her down-to-earth personality, she shared some candid thoughts on the financial aspects of working in the film industry. Rashmika revealed that while money is important, it’s the love and passion for her craft that truly drives her. She mentioned how grateful she is to be part of such a huge project and emphasized that it’s not just about the paycheck but also about being part of something special.