நடிகை ரோகினி, தனது முன்னாள் கணவரும் மறைந்த நடிகருமான ரகுவரன் அவர்களைப் பற்றிய நினைவுகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, அவர்களின் மகன் ரிஷி திருக்குறள் சொல்லும் திறமையைக் கண்டு ரகுவரன் வியந்து போன தருணத்தை அவர் விவரித்தார்.
திருக்குறள் திறமை
ரோகினி பள்ளியில் படிக்கும்போது தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதேபோல, அவரது மகன் ரிஷியும் தமிழ் மீதும் திருக்குறள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் திருக்குறள் சொல்லக்கூடிய நிகழ்ச்சி என்றால் முதலில் ரிஷியைத் தான் அழைப்பார்கள்.
ஒரு நாள் ரிஷியை அழைத்து வர ரகுவரன் பள்ளிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு நிகழ்ச்சியில் ரிஷி திருக்குறள் சொன்னதைப் பார்த்து ரகுவரன் வியந்து போயிருக்கிறார்.
வியந்து போன தந்தை
வீட்டுக்கு வந்ததும், “திருக்குறளை எப்படி அழகாக சொல்றான் தெரியுமா,” என்று வியப்புடன் கூறினார். அந்த அளவுக்கு தன் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டு சந்தோஷப்பட்டார். அவர் அந்த அளவுக்குப் பொறுப்பாகப் பேசினான் பார்த்ததே கிடையாது.
அப்படி பேசிய பிறகு தற்போது இருந்திருந்தால் என்னுடைய மகன் செய்யும் விஷயங்களைப் பார்த்து எந்த அளவுக்கு பெருமை அடைந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
இப்போது நினைத்தால்கூட எனக்கு ஒரு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. அவர் நம்முடன் தற்போது இல்லை என்பது. இருந்திருந்தால் என்னுடைய மகனின் இந்த வளர்ச்சியை கொண்டாடி இருப்பார் என வேதனையுடன் பேசியிருக்கிறார் நடிகை ரோகினி.
ரோகினியின் இந்த பேட்டி, ரகுவரன் தனது மகன் மீது எவ்வளவு பாசம் கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. ரகுவரன் மறைந்தாலும், அவரது நினைவுகள் ரோகினி மற்றும் ரிஷி மனதில் நீங்காமல் இருக்கும் என்பதை இந்தப் பேட்டி உணர்த்துகிறது.
Loading ...
- See Poll Result