சம்பள செக்கை பார்த்து பதறிய சமுத்திரகனி..! SS ராஜமௌலி செய்த சம்பவம்..!

1971-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு சவால்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனராக இருந்த இவர் நடிகராகவும் களம் இறங்கி கலக்கினார்.

இவர் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றியதை அடுத்து 2003-ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

சம்பள செக்கை பார்த்து பதறிய சமுத்திரகனி..

இயக்குனராக களம் கண்ட இவர் நடிகராக அப்பா, சாட்டை போன்ற திரைப்படங்களில் நடித்ததை அடுத்து வெற்றிமாறன் படத்தில் நடித்த விசாரணை படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

மேலும் அனைவரிடமும் எளிய குணத்தோடு பழகும் தன்மை கொண்ட சமுத்திரக்கனி தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருப்பதோடு வில்லனாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடிக்க இவரிடம் ராஜமவுலி அணுகிய போது ராஜமவுலி பேசிய மறுநாளே இவர் தனது சொந்த செலவில் ஹைதராபாத் சென்று அந்த படம் குறித்த விஷயங்களை கேட்டு அறிந்து கொண்டார்.

SS ராஜமௌலி செய்த சம்பவம்..

இந்நிலையில் சமுத்திரக்கனி அவரிடம் அந்த படம் குறித்து அனைத்து விஷயங்களையும் கேட்டு வந்த சமயத்தில் ராஜமவுலி அவரிடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்க சமுத்திரக்கனி அது பற்றி பெரிதாக எதுவும் பேசாமல் உங்கள் படத்தில் நடித்தாலே எனக்கு அது பெருமை என்பது போல சொல்லி இருக்கிறார்.

மேலும் அவரே தனது சொந்த செலவில் விமான டிக்கெட் மற்றும் அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு அவரை சந்தித்ததை அடுத்து ராஜ மௌளி அவருக்கு ரூபாய் 2 சம்பளம் என கூறியுள்ளார் இதில் 2 என்றால் 2 லட்சம் என்று சமுத்திரக்கனியும் கருதி சென்று விட்டார்.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து இறுதியில் சமுத்திரக்கனிக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது‌ இதனால் அதிர்ச்சி அடைந்த சமுத்திரக்கனி சம்பளத்தை தவறாக எழுதி விட்டாரோ என்று நினைத்து ராஜமவுலி இடம் இது பற்றி கூற ராஜமவுலி இவர் அழைத்த மறு நிமிடமே தனது சொந்த செலவில் செலவு செய்து கொண்டு வந்த நேர்மை பிடித்ததாக கூறியிருக்கிறார்.

அதை அடுத்து இவர் எதிர்பார்க்காத 2 கோடி சம்பளத்தையும் கொடுத்து ராஜமவுலி அசத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் எஸ் எஸ் கார்த்திகே தயாரிக்க உள்ள படத்திலும் சமுத்திரக்கனியை நடிக்க ஒப்பந்தம் செய்து 1.5 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam