சினிமா நடிகைகள் பலரும் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் அதிகம் காசு பார்க்கிறார்கள். இன்னும் கடை திறப்பு விழாக்களில் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது.
15 நிமிடம் 30 நிமிடம் அந்த கடை திறப்பு விழாவுக்கு சென்று விட்டு வந்தால் லட்சக்கணக்கில் பணம் வங்கி கணக்கில் கிரெடிட் ஆகிறது. ஆனால், இதில் மிகப்பெரிய சிக்கலும் இருக்கிறது.
கடை திறப்பு விழாக்களுக்கு நடிகைகளை அழைக்கக்கூடிய நிறுவனங்கள் சில நேரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறி விடுகின்றனர். இதனால் கடைக்கு வரக்கூடிய நடிகைகள் கடுமையான சீண்டலுக்கு உள்ளாகும் நிகழ்வுகளையும் நாம் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சில இடங்களில் பேசக்கூடிய மேடை இடிந்து விழுவது.. ஊரே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்டம் கூடி ட்ராஃபிக் ஜாம் ஏற்படுவது.. இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் மரணம் ஏற்படுவது.. என இதனால் சமூகப் பிரச்சினைகளும் அதிகமாக ஏற்படுகின்றன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து நடிகைகள் கடை திறப்பு விழாக்களில் தென்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.
அங்கே நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது அவரை சூழ்ந்து கொண்டு அங்கிருந்த ரசிகர்கள் அவரை தொடக்கூடாத இடங்களில் தொட்டு துன்புறுத்தி இருக்கின்றனர்.
மிரண்டு போன சம்யுக்தா மேனன் தன்னுடைய கைகளால் முன்னழகை மூடிக்கொண்டார். அதன் பிறகு அங்கே ஓடிவந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செல்ஃபி எடுக்கும் சாக்கில் அங்கு இருந்த கயவர்கள் சிலர் அவரை தொடக்கூடாத இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்யும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
View this post on Instagram
Loading ...
- See Poll Result