பிரபல நடிகை சங்கீதா சமீபத்தில் பிரபல தனியார் Youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இளம் வயதில் சினிமா மீதான புரிதலையும் தன் உடல் நலத்தின் மீதான அணுகுமுறையையும் எப்படி கொண்டிருந்தேன் என்று பேசி இருக்கிறார்.
அவர் பேசியதாவது, சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் குண்டாக இருந்தேன். முகம் எல்லாம் உப்பி போய் இருக்கும் முகப்பருக்கள் இப்படியே சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன்.
அடிக்கடி உடல் எடையை குறைக்கிறேன் என கூறி ஜிம்முக்கு போறேன் என்று சொல்லிவிட்டு அங்கு போய் ஏசி காற்றில் உட்கார்ந்து.. அரட்டை அடித்து விட்..டு நன்றாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விடுவேன்.
இப்படியே படங்களிலும் நடித்துக் கொண்டு இருந்தேன். நான் நடித்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்க போனேன்.. அங்கு தான் அந்த கொடுமை அரங்கேறியது.
படத்தில் என்னை பார்த்து விட்டு, நானா இது..? என்ன இவ்வளவு குண்டாக இருக்கிறேன். ரொம்ப மோசமாக இருக்கிறது.. ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.. என என்னுடைய அம்மாவிடம் கதறினேன்.
மட்டுமில்லாமல் இனிமேல் நான் நடிக்கவே மாட்டேன் என்றெல்லாம் கூறினேன். அப்போது, என்னுடைய அம்மா உனக்கு இப்போ என்ன வயதாகிறது 15 வயது தான் ஆகிறது.
நீ அழகாக இருக்கிறாய்.. ஹீரோயின் போல இருக்கிறாய்.. மிகவும் அழகாக நடித்திருக்கிறாய். ஏன் உன்னை நினைத்து நீயே இப்படி தாழ்வாக நினைத்துக் கொள்கிறாய் என்று கூறுவார்.
மேலும், என் அம்மாவே நீ தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என சொன்னார். ஆனால் நான் என் அம்மாவிடம் இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று கதறுவேன் என கூறியிருக்கிறார் நடிகை சங்கீதா.
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading ...
- See Poll Result