நடிகை மற்றும் உதவி இயக்குனராக அறியப்படும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகையாக இருக்கிறார்.
ஆனால், இதற்கு முன்பே கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வதந்தி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸில் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.
அவர் கூறியதாவது, முதன் முதலில் இப்படி ஒரு வெப்சீரிஸ் நடிக்க வேண்டும் எனக்கு என எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்ததும் புஷ்கர் காயத்ரி அவர்கள் தான் இந்த சீரிஸை தயாரிக்கிறார் என்று கூறினார்கள்.
அதன் பிறகு அவர்கள் என்ன பேசினார்கள் என்றே தெரியவில்லை. ஏனென்றால் புஷ்கர் காயத்ரி அவர்கள் தயாரிக்கிறார்கள் என்றதும் எனக்கு வியப்பாகிவிட்டது. அதன் பிறகு அவர்கள் சொல்லியது எதுவுமே என்னுடைய காதில் விழவில்லை.
அன்று தொலைபேசி அழைப்பு வந்த அன்றே அவர்களை சென்று அலுவலகத்தில் பார்த்தேன். ஆனால், நான் நினைத்து கூட பார்க்கவில்லை எனக்கு இப்படி ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார்கள் என்று.
நிஜமாக நான் எதுக்கு அன்று அவர்களுடைய அலுவலகத்திற்கு சென்றேன் என்றால் அவர்களை சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பாக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் சென்றேன்.
அவர்களை சந்தித்து விட்டால் போதும் என்று தான் என்னுடைய மனநிலை இருந்தது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ன கதாபாத்திரம் என்ன கேட்க வேண்டும் என எந்த எண்ணமும் கிடையாது.
புஷ்கர் காயத்ரி அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் தான் அங்கே சென்றேன். ஆனால், இன்று ஒரு மிகப்பெரிய கதாபாத்திரத்தை கொடுத்து எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார்கள் இதை நினைத்துக்கூட பார்க்கவில்லை எனவும் பேசி இருக்கிறார் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.
Loading ...
- See Poll Result