நடுரோட்டில் அதை பண்ண சொன்னார்.. கொடுமை.. என் வாழ்க்கையில் மிகப்பெரிய நஷ்டம்.. கதறும் சரண்யா பொன்வண்ணன்..!

நடிகை சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை. இதனை அடுத்து 1980-களில் பல திரைப்படங்களில் நடித்து அதனை அடுத்து 8 ஆண்டுகள் திரைத்துறை பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.

மீண்டும் இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அம்மா வேடத்தில் நடித்து அசத்தி அனைவரையும் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

நடுரோட்டில் அதை பண்ண சொன்னார்.. கொடுமை..

இவர் 2005-ஆம் ஆண்டு ராம் என்ற திரைப்படத்திலும் தவமாய் தவமிருந்து என்ற திரைப்படத்திலும் அம்மாவாக நடித்திருக்கிறார். அது போல எம்டன் மகன், களவாணி போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பிலிம்பேர் விருதுகள் பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் 2010 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற இவர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொள்ள இந்த மண வாழ்க்கை நீடிக்காததால் விவாகரத்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இவர் 1995-ஆம் ஆண்டில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அதிக அளவு அம்மா கதாபாத்திரங்களை செய்து வந்த இவர் அண்மை பேட்டி ஒன்றில் அந்த சீனில் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் எனக்கும் தன்மானம் இருக்கும் இல்ல. நடு ரோட்டுல உருண்டு நடிக்க முடியாது என்று இயக்குனரிடம் நான் கோபமாக கூறிவிட்டேன் எனினும் அவர் என்னை விடுவதாக இல்லை.

இதை அடுத்து இயக்குனர் திருமுருகன் தன்னிடம் கெஞ்சியதாவாகவும் இதை செய்தால் ரிசல்ட் சூப்பராக வரும் என்று சொன்னதாகவும் எம்டன் மகனின் நடிக்கும் போது நடந்த அனுபவத்தை மிகவும் விரிவாக கூறியிருந்தார்.

என் வாழ்க்கையில் மிகப்பெரிய நஷ்டம்.. கதறும் சரண்யா பொன்வண்ணன்..

மேலும் உச்சி வெயிலில் நடுரோட்டில் பலர் பார்க்க நான் உருள வேண்டுமா? எனக்கு சுத்தமாகவே இது பிடிக்கவில்லை .மேலும் உடலில் மண் ஓட்டுவதெல்லாம் எனக்கு பிடிக்காது . அத்தோடு தண்ணீர் நிறைந்த ஆடைகளோடு நான் உருளுவதை நினைத்து எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டேன்.

அதுமட்டுமல்லாமல் மழையில் நனைப்பது போன்ற காட்சிகள் உள்ளது என்று சொன்னால் கூட அந்த படமே தேவையில்லை என்று நான் சொல்லி விலகி விடுவேன். அப்படிப்பட்ட என்னிடம் இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

இதன் அடுத்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அந்த காட்சிகள் நடிக்க வைத்திருந்தார். நான் சொன்ன உடனே அவரும் கௌரவம் பார்த்து வேண்டாம் என்று விட்டு இருந்தால் என்னுடைய வாழ்நாளில் அது ஒரு மிகப்பெரிய நஷ்டமாக மாறி இருக்கும்.

மேலும் என் வாழ்க்கையில் அது ஒரு மிகப்பெரிய நஷ்டத்தை சினிமா கேரியரில் ஏற்படுத்தி இருக்கும் என அந்தப் பேட்டியில் கூறிய விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள். இதை தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam