seetha october october

சீதாவின் 2வது புருஷன் என்ன இப்படி பேசிட்டாரு…! ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் திரை உலகில் அதிகளவு கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சீதா. இவர் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தவர்.

seetha october october

80, 90-களில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சீதா சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரமாக இருக்கும் போதே இயக்குனர் பார்த்திபனை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டவர்.

சீதாவின் 2வது புருஷன் என்ன இப்படி பேசிட்டாரு…

நடிகை சீதா புதிய பாதை திரைப்படத்தில் நடிக்கும் போது தான் இயக்குனர் பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு அந்த காதல் சிறிது சிறிதாக வளர்ந்து பெற்றோர்கள் எதிர்த்த போதும் வீட்டை விட்டு ஓடி வந்து பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட சீதாவின் வாழ்க்கை சீரும் சிறப்புமாக சென்றது.

இதை அடுத்து பார்த்திபனுக்கு இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுக் கொடுத்த இவர் ஒரு ஆண் பிள்ளையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை இவர்கள் இருவர் இடையே விரிசல் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள்.

seetha october october

அப்படி பிரிந்து வாழக்கூடிய நடிகை சீதா சின்னத்திரை சீரியல் நடிகரான சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இடையேயும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் இந்த மண வாழ்க்கையும் முறிந்து போனது.

இதனை அடுத்து தற்போது சீதாவின் இரண்டாவது கணவர் சீதாவை பற்றி பேசிய விஷயம் வைரலாக இணையம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அந்த சீதாவின் கணவர் என்ன தான் பேசினார் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சீதாவை பற்றி பேசிய பேச்சு..

இணையம் முழுவதுமே சீதா பார்த்திபன் தம்பதிகள் ஏன் பிரிந்தார்கள் என்ற பேச்சு அண்மைக்காலமாக வெளிவரக்கூடிய சமயத்தில் சீரியல் நடிகர் சதீஷ் முதல் முறையாக சீதாவை பற்றி தெலுங்கு பத்திரிகைகளில் பேசியிருக்கும் செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேச்சில் அவர் நடிகை சீதாவை இவர் பார்த்திபனிடமிருந்து பிரித்து விட்டதாக பலர் கூறுவதாக சொல்லி இருக்கிறார். ஆனால் நடிகை சீதா தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர்.

seetha october october

இந்நிலையில் என் மனைவி என்னை விட்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று தெரிந்திருந்த நிலையில் நான் சீதாவை கல்யாணம் பண்ணி ஒன்றாக வாழ்ந்து பிறகு டைவர்ஸ் வாங்கி விட்டோம் என்று சொல்வதெல்லாம் கூட இருந்த நடிகர்கள் மற்றும் மீடியாக்கள் செய்த வேலைதான்.

ரசிகர்கள் அதிர்ச்சி..

உண்மையைச் சொல்லப்போனால் நானும் சீதாவும் மிகச்சிறந்த நண்பர்களாகத் தான் இன்று வரை திகழ்கிறோம். இப்போது கூட பார்த்தீர்கள் என்றால் எங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் நிச்சயமாக சீதா வருவார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

seetha october october

இதனை அடுத்து சீரியல் நடிகர் சதீஷ் பேசிய விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அப்ப இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே ஆகலையா என்ற கேள்வியும் அரசல் புறசலாக எழுந்துள்ளது.

மேலும் ஓபன் ஆக இந்த விஷயத்தை பற்றி பேசி இருக்கும் சீரியல் நடிகர் சதீஷ் சொன்ன விஷயம் தற்போது இணையம் முழுவதும் பற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் சீதாவின் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

--- Advertisement ---

Check Also

lokesh kanagaraj ajith october october

அஜித்தை வைத்து படம் எடுக்குறேன்.? லோகேஷ் கொடுத்த அப்டேட்.. அப்புறம் என்ன ஜாலிதான்.!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் மிக முக்கியமான ஒரு இயக்குனராக மாறியிருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தில் துவங்கி …