24 வருடங்களுக்கு பிறகு ஷாலினி செய்த தரமான சம்பவம்..!

பேபி ஷாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் தனது மூன்றாவது வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். 

இவர் தமிழ், மலையாள மொழிகளில் ஏறத்தாழ 90 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஹீரோயினியாகவும் சில படங்களில் நடித்து அனைவரையும் அசத்தியவர்.

24 வருடங்களுக்கு பிறகு..

இவர் அமர்க்களம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த போது இவருக்கும் தல அஜித்துக்கும் இடையே காதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் ஷாலினி நடிக்கவில்லை. 

திருமணத்திற்கு முன்பு இவர் நடிப்பில் வெளி வந்த அலைபாயுதே திரைப்படமானது இவர் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து நடிக்கப்பட வாய்ப்புக்கள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்கள் இவர் பெயரை என்றும் திரையுலகில் சொல்லும் அளவிற்கு பேமஸ் வாய்ந்த திரைப்படங்கள் ஆகும். 

shalini 2

மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்க கூடிய இவர் 1985-இல் வெளி வந்த பந்தம், பிள்ளை நிலா, விடுதலை, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தியிருப்பார். 

இந்நிலையில் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தல அஜித் தன் மனைவியின் பக்கத்திலிருந்து கவனித்துக்கொண்டு ஒரு கணவர் மனைவிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் இவரது செயல் இருந்தது என்று இணையமே பாராட்டியது. 

இந்நிலையில்  தல அஜித் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற நடிகை ஷாலினி செய்த தரமான சம்பவம் தான் தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாகிவிட்டது. 

இதனை அடுத்து ஷாலினி செய்த 24 ஆண்டுகளுக்கு பிறகு செய்திருக்கும் தரமான சம்பவம் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஷாலினி செய்த தரமான சம்பவம்..

அந்தத் தரமான சம்பவம் என்னவென்றால் அலைபாயுதே படத்தில் தன்னோடு இணைந்து நடித்த மாதவனை 24 ஆண்டுகள் கழித்து சந்தித்த நடிகை ஷாலினி அவரோடு எடுத்துக்கொண்ட செஃல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் 24 வருடங்கள் கழித்து இந்த ரீல் ஜோடி சந்தித்ததை பற்றி பேசி வருகிறார்கள். 

shalini 3

அத்தோடு அந்த படத்தில் இடம் பிடித்த காதல் சடுகுடு பாடல் இன்று வரை பேமஸான பாடல்களில் ஒன்றாக உள்ளது என்பதை சொல்லி வருவதோடு ஷாலினி கிளாமராக நடித்த இந்த பாடலை ரிலீஸ் செய்யக்கூடாது என்று அஜித் படாத பாடு படுத்தி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினத்தோடு இந்த பாட்டை வெளியீடு செய்ய வேண்டாம் என்று மல்லுக்கட்டிய விவகாரங்கள் அன்று வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 

இதை அடுத்து ஷாலினி தற்போது மாதவனை சந்தித்த விஷயம் தான் தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு ஷாலினி செய்த தரமான சம்பவமாக ரதிகளில் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam