நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய தங்கை அக்ஷரா ஹாசன் குறித்து பேசும்போது, சிறுவயதிலிருந்து என்னை அவள் அக்கா என்று தான் அழைப்பாள்.0
பொது இடங்களில் பேசும்போது மட்டுமே என்னுடைய பெயரை கூறுவார் அப்போதும் கூட ஸ்ருதி அக்கா என்று தான் சொல்லுவாள். அந்த அளவுக்கு என்மேல் என் தங்கை அக்ஷராவுக்கு பாசம் இருக்கிறது என பேசி இருந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை பார்த்திருப்பீர்கள். இந்நிலையில், இது குறித்து அவருடைய தங்கை அக்ஷரா ஹாசனிடம் கேட்டபோது அக்கா சொல்வது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் சின்ன வயசுல இருந்தே ஸ்ருதி அக்காவை அக்கா என்று தான் அழைப்பேன். தவறுதலாக ஸ்ருதி என்று அழைத்து விட்டால்.. ஹே.. நான் உனக்கு அக்கா தானே.. மறந்து போச்சா.. ஒழுங்கா அக்கானு கூப்பிடு என்று என்னுடைய தலையிலேயே அடிப்பார்.
அதனால் சிறு வயதிலிருந்து எனக்கு அந்த பழக்கம் இருக்கிறது. பொது இடங்களில் அக்காவின் பெயரை சொன்னால் கூட ஸ்ருதி அக்கா என்று தான் சொல்லுவேன்.
எங்காவது தெரியாத தனமாக ஸ்ருதி என்று சொல்லிவிட்டால் எனக்கு மன உறுத்தலாக இருக்கும். எதையோ தப்பா செய்து விட்டோமே என்று தோன்றும். உடனே அக்காவுக்கு போன் செய்து இப்படி நடந்து விட்டது என சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் என பேசி இருக்கிறார்.
இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading ...
- See Poll Result