நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அவரிடம் சிறுவயதில் எந்த விஷயத்திற்காக உங்கள் அப்பாவிடம் அதிகமாக அடி வாங்கி இருக்கிறீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன் அப்பா என்னை அடித்ததாக எனக்கு நினைவில் இல்லை. எதற்கும் அவர் கோபப்பட மாட்டார். அடிக்க மாட்டார். ஆனால் என்னுடைய தங்கை அக்ஷரா பயங்கரமாக சேட்டை செய்வார்.
ஏதாவது ஒரு சேட்டை செய்து கொண்டே இருப்பார். இதனால் அக்ஷரா நிறைய அடி வாங்கி இருக்கிறாள். ஆனால், நான் செய்யக்கூடிய சேட்டைகள் எல்லாம் பெரிய லெவலில் இருக்கும்.
சின்ன சின்ன சேட்டைகள் எல்லாம் செய்ய மாட்டேன். அது எனக்கு பிடிக்காது. இதனாலேயே அப்பா என்னை அடித்ததில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஒரு முறை நான் என்ன செய்தேன் என்றால் பள்ளியில் ப்ரொக்ரஸ் ரிப்போர்ட்டை (Progress Report) கொடுத்திருந்தார்கள். அதை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் தூக்கி போட்டு விட்டேன்.. தூக்கி எறிந்து விட்டேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து ஏன் குறைவான மார்க் வாங்கி இருந்தீர்களா..? என்று தொகுப்பாளினி கேள்வி கேட்டார். அதற்கு, பதிலளித்த ஸ்ருதிஹாசன் குறைவான மதிப்பெண் வாங்கவில்லை.. Fail Mark வாங்கி இருந்தேன்.
அதை காட்டினால் கண்டிப்பாக எனக்கு அன்று பயங்கரமாக அடி விழுந்திருக்கும். அதை, யாருக்கும் தெரியாமல் தூக்கிப் போட்டு விட்டேன் என பேசி இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இந்தச் சம்பவம் ஸ்ருதியின் குறும்புத்தனத்தையும், அதே நேரத்தில் தனது அப்பாவின் கண்டிப்பான அணுகுமுறையையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக, பள்ளியில் குறைந்த மதிப்பெண் வாங்கினால் பெற்றோர்கள் கண்டிப்பது வழக்கம்.
அதிலும் குறிப்பாக, கமல்ஹாசன் போன்ற பெரிய ஆளுமையின் மகள் என்பதால், ஸ்ருதி மீது கூடுதல் கவனம் இருந்திருக்கும். அதனால் தான், ஃபெயில் மார்க்கைக் கண்டவுடன் ஸ்ருதி அதை மறைக்க முயன்றிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
Loading ...
- See Poll Result