SHRUTIKA-வ இப்படி பாக்க முடியல கதறி அழுத கணவர் ARJUN..! HINDHI BB-யில் நடக்கும் அவமானங்கள்..!

பிரபல நடிகை SHRUTIKA ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்து தற்போது வரை சக பிக் பாஸ் போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

அவர் பிக் பாஸ் வீட்டில், தான் செய்யக்கூடிய விஷயங்களுக்கு அவமானப்படுத்தப்பட்டால் அது விளையாட்டு சார்ந்த விஷயமாக பார்க்கலாம். பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்குகள் சம்பந்தமாக சக போட்டியாளர்களால் விமர்சிக்கப்படுகிறார் அல்லது போட்டியாளர்களுடன் சண்டை வருகிறது என்றால் அது முழுக்க முழுக்க விளையாட்டு என எடுத்துக் கொள்ளலாம்.

shrutika hindi biggboss

ஆனால், தனிப்பட்ட முறையில் SHRUTIKA-வை அவமானப்படுத்தும் விதமாக பல போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள். இது சார்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் இருக்கும் SHRUTIKAவின் ரசிகர்களை கோபப்படுத்துகிறது.

இதனால் SHRUTIKAவின் நடவடிக்கைகள் குறித்து ஹிந்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கு இருக்கும் ரசிகர்கள் இணைய பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பாக இந்த ஹிந்தி பிக் பாஸ் சீசன் மாறி இருக்கிறது.

shrutika hindi biggboss

இது ஒரு பக்கம் இருக்க ஸ்ருதிஹாவின் கணவர் சமீபத்திய பேட்டியில் பேசும்போது SHRUTIKAவை போட்டி ரீதியாக எதிர்கொண்டால் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறார்கள்.

உனக்கு 35 வயதுக்கு மேல் ஆகிறது. ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பின்பும் எப்படி இப்படி ஒல்லியாக இருக்க முடியும்..? எப்படி உன்னால் இப்போதும் குழந்தைத்தனமாக சிரிக்க முடிகிறது..? நீ நடிக்கிறாய்.. இப்படி எல்லாம் அவளை தனிப்பட்ட முறையில் தாக்கும் போது பாக்குறதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அவருடைய பேச்சுக்களை, பேசும் விதத்தை கிண்டலடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள் ஒரு கட்டத்தில் அவருடைய உடல் மொழியை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக அங்கு இருக்கும் போட்டியாளர் ஷில்பா என்பவர் மீது எனக்கு பயங்கர கோபம். நான் விரைவில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல போகிறேன். நான் போகும்போது அவர் அங்கே இல்லாமல் இருந்தால் நல்லது.

shrutika hindi biggboss

அதற்கு முன்னாடி அவர் எலிமினேட் ஆகி சென்று விட்டால் நல்லது. இல்லையென்றால் பெரிய பிரச்சினை நடக்கும். SHRUTIKA-வை பிரிந்து நாங்கள் இத்தனை நாள் இருந்தது கிடையாது.

முதல் முறையாக இத்தனை நாட்கள் SHRUTIKAவை பிரிந்து இருக்கிறோம். நான் மட்டும் இல்லை என் குடும்பத்தில் அனைவருமே SHRUTIKA-வை ரொம்ப மிஸ் பண்றோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய கஷ்டங்களை பார்க்கும் போது கூட எங்களுக்கு கஷ்டமாக இல்லை.

shrutika hindi biggboss

ஆனால் அவரை மிஸ் பண்றோமே என்ற நினைப்பு மிகவும் கடினமான ஒரு உணர்வாக இருக்கிறது என கண்ணீர் விட்டு இருக்கிறார் அவருடைய கணவர் அர்ஜுன்.

Summary in English : In a recent twist on the reality TV scene, actress Shrutika has been making waves as a contestant on Hindi Bigg Boss. Fans are loving her journey in the house, but it’s her husband who’s really stealing hearts with his emotional interviews. He opened up about how much he misses her and couldn’t help but shed a few tears while talking about their time apart. It’s tough for him to see her on the show, knowing they’re separated by those four walls.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam