Connect with us

சினிமா செய்திகள்

காகா பறந்தா கூட சுட்டுருவாங்க.. அப்படி ஒரு இடம்.. எங்க எல்லாம் படப்பிடிப்பு நடத்தி இருக்காங்க.. அமரன் பட அப்டேட்..!

By Madhu VKOctober 15, 2024 7:57 PM IST

தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம்தான் அமரன்.

இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் கிடைத்த வசூல் சாதனையை வைத்து நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படியாக அவர் தயாரிக்கும் திரைப்படம்தான் அமரன்.

இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்திய ராணுவத்தில் முக்கிய மேஜராக இருந்து இறந்த முகுந்த் வரதராஜனின் கதையைதான் படமாக்கி வருகின்றனர்.

காகா பறந்தா கூட சுட்டுருவாங்க

இதனால் இந்த படம் குறித்து எக்கச்சக்கமான வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் இதுவரை எந்த ஒரு பயோபிக் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்தது கிடையாது. இதுதான் அவருக்கு முதல் படம்.

இதனால் சிவகார்த்திகேயனுக்குமே இது முக்கிய படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த திரைப்படம் பார்க்க முழுக்க முழுக்க உண்மையிலேயே ராணுவத்தில் நடந்த கதையாக இருக்க வேண்டும் என்பதற்காக பட கதையில் நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

அப்படி ஒரு இடம்

இதுவரை இந்தியாவில் ராணுவம் தொடர்பாக வந்த எந்த ஒரு திரைப்படத்திலும் ராணுவம் குறித்து இவ்வளவு விவரங்கள் இருக்காது என்கிற அளவில் இந்த பாடத்திற்காக நிறைய விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மேலும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் உண்மையான ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் பட குழுவை சேர்ந்த பலருக்கும் ஆயுதப் பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அமரன் பட அப்டேட்

அதேபோல இந்த திரைப்படம் குறித்து இன்னமும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. அதாவது இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் இதனால் முகுந்த் வரதராஜன் உண்மையிலேயே எந்த ராணுவ முகாம்களில் எல்லாம் தங்கி இருந்தாரோ அதே ராணுவ முகாம்களுக்கு சிவகார்த்திகேயனை அழைத்துச் சென்று படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர்.

இன்னும் விவரமாக சொல்ல வேண்டும் என்றால் ராணுவ முகாம்களில் எந்த படுக்கையில் முகுந்த் வரதராஜன் படுத்திருந்தாரோ அந்த படுக்கை வரை சிவகார்த்திகேயனுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சில ராணுவ தளங்களிலும் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த படப்பிடிப்பு தளங்களுக்கெல்லாம் மனிதர்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது. அப்படி ராணுவத்தால் பாதுகாக்கப்படும் இடங்களுக்கு மிகவும் கடினப்பட்டு அங்கு படப்பிடிப்பை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்று படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர்.

எனவே அமரன் திரைப்படம் இதுவரை வந்த ராணுவ வீரர்கள் தொடர்பான திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top