நடிகை ஸ்ரீவித்யா நடிகர் கமலஹாசன் உடனே காதல் விவகாரம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இவர்கள் பிரிந்ததற்கு காரணம் என்ன என்று பலருக்கும் தெரிந்திருக்காது.
இது குறித்து நடிகை ஸ்ரீவித்யாவை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் கமல்ஹாசன் உடன் நீங்கள் காதலில் இருந்தீர்கள்..!! எதனால் கமல்ஹாசன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்..? என்ற கேள்விக்கு ஸ்ரீவித்யாவே பதில் அளித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, நானும் கமல்ஹாசனும் காதலித்தோம் என்பது எல்லோருக்குமே தெரியும். திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் தெரியும்.
கமல்ஹாசனின் வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும். என் வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியும். கமல்ஹாசன் என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வீட்டில் கூறினார்கள். கமலஹாசனை தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் வீட்டில் கூறினார்கள்.
ஒரு நாள் என்னையும் கமலஹாசனையும் என் அம்மா சந்தித்து பேசினார். அவர் என்ன கூறினார் என்றால்.. உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. நீங்கள் சினிமாவில் மிகப்பெரிய உயர்வுக்கு செல்ல முடியும். அதேபோலத்தான் ஸ்ரீவித்யாவும் நல்ல திறமையான நடிகை அவளுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அவருக்கும் திரைத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார்.
அவர் என்ன நினைத்து அப்படி கூறினார் என்று தெரியவில்லை.. அதனை கமல் சார் எப்படி புரிந்து கொண்டார் என்று எனக்கு தெரியவில்லை.. அப்போது என் வீட்டை விட்டு சென்றவர் தான்.. அதன் பிறகு என்னிடம் நீண்ட வருடங்களாக பேசவே இல்லை.
சரி திரும்பி வருவார் என்று காத்திருந்தேன். ஆனால், திடீரென வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் தான் எனக்கு கிடைத்தது. நான் அந்த நிமிடம் உறைந்து போய்விட்டேன். என் கண் முன் இருந்த எல்லாமே மறைந்து விட்டது. அவ்வளவுதான் இனிமேல் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது என பேசி இருக்கிறார் ஸ்ரீவித்யா. இவருடைய இந்த பேட்டி தற்போது இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.
--- Advertisement ---