Connect with us

சினிமா செய்திகள்

«பிரியங்காவுக்கு என்னை விட 10 மடங்கு பெருசு..» இதை சொல்ல நான் வெட்கப்படல.. சீரியல் நடிகை சுஜிதா..!

By TamizhakamJanuar 15, 2025 3:11 PM IST

சீரியல் நடிகை சுஜிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் பேசிய அவர் நான் ஒரு குடும்ப தலைவியாக இருக்கிறேன். தினமும் சமைக்கிறேன்.

எனக்கு குழந்தைகள் இருக்கிறது. எனக்கு நிறைய சமைக்க தெரியும்.. அப்படி இருந்தாலும் கூட குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும்போது குறைந்தபட்சம் ஒரு 10 வகையான உணவுகளை தயாரிக்க சமைக்க கற்றுக் கொண்டு ஒரு ஒத்திகை பார்த்துவிட்டு தான் செல்வேன்.

ஆனால், பிரியங்காவின் நிலைமை இப்படி கிடையாது. அவர் அதிகமாக சமைக்க கூடிய வேலை அவருக்கு கிடையாது. நான் அனைத்தையும் கற்று வைத்திருந்தாலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறேன் என்று தெரியும்.

அப்படி பார்க்கும்போது  பிரியங்காவுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் என்னை விட பத்து மடங்கு பெருசு. இதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. ஏனென்றால் பிரியங்காவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். மிகச் சிறந்த போட்டியாளர் அவர் என பேசி இருக்கிறார் சுஜிதா.

இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top