Connect with us

சுந்தர். சியுடன் இணைந்து கலக்கிய லட்சுமி மூவி மேக்கர்ஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுந்தர். சியுடன் இணைந்து கலக்கிய லட்சுமி மூவி மேக்கர்ஸ்.

lakshmi

லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே. முரளிதரன், வி. சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் இவர்களால் சென்னை யை தலைமை இடமாக கொண்டு 1990 ஆம் தோற்றிவிக்கப்பட்ட சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வி. சுவாமிநாதன் தனது தயாரிப்புகளில் ஏதேனும் ஓரு கதாபாத்திரத்தில் நடித்தவர்.

1990 களின் நடுப்பகுதியில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. 1996 – ல் வெளி வந்த “கோகுலதில் சீதை”  மற்றும் 1998 – ல் “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்”  போன்ற இரண்டு படங்களும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி கம்பெனிக்கு நல்ல பெயரையும் சிறந்த லாபத்தையும் பெற்று தந்தது.

1994 ல் “அரண்மனை காவலன்” படத்தில் துவங்கிய இவர்களின் பயணம் 1995 ல் பி.வாசு இயக்கிய “திரு மெட்ராஸ்” திரைப்படம், பின் 1996 அகத்தியனின் “கோகுலதில் சீதை” மிக பெரிய அளவில் வெற்றி யை தந்தது.

இதையும் படிங்க :  என்ன சொல்றீங்க..? - இவ்வளவு சீக்கிரமாவா..? - இரண்டாவது திருமணம் பற்றி வாய் திறந்த மீனா..!

        sunder c

1997 ல் கே.எஸ்.ரவிக்குமாரின் “தர்ம சக்கரம்”, 1998 ல்    விக்ரமன் இயக்கிய “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்”. அதே ஆண்டு கஸ்தூரி ராஜாவின் “வீரம் விளஞ்சா மண்ணு”போன்ற படங்களை தயாரித்தது. 

1999 சுந்தர் சி. “உன்னை தேடி”, “உனக்காக எல்லாம் உனக்காக”, 2000 –  யிரத்தில் “கண்ணன் வருவான்”, 2001 ல் “உள்ளம் கொள்ளை போகுதோ”, 2003 “அன்பே சிவம்” போன்ற ஐந்து படங்களில் இயக்குனர் சுந்தர். சி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் இரண்டு படங்களில் இந்நிறுவன ம்பணியாற்றி உள்ளது. “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” மற்றும் “உன்னை தேடி” ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

மேலும் 2002 ல் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி ,  படத்தில் ஒரு காட்சியில் சுவாமிநாதன் நடித்து இருந்தார். 2004 பாரதிராஜாவின் “சங்கர்லால் கைது”.    2005     பாசில் இயக்கிய “ஓரு நாள் ஓரு கனவு”, 2006 ல் செல்வராகவனின் “புதுப்பேட்டை”, 2010 ல்     “ஆட்டநாயகன்”, 2015  ல் சூரஜ் இயக்கிய “சகலகல வல்லவன்” வரை இவர்களின் பட தயாரிப்ப நீண்டு சென்றது.

இதையும் படிங்க :  ‘விடுதலை’ படத்தை தொடர்ந்து 3 படங்களில் ஹீரோவாக ‘கமிட்’ ஆன சூரி

ajith

வி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் ராஜா “கும்கி” படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முன்பு அவர் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ராஜேந்திரனின் மகனாக நடித்து இருந்தார். ஆர்யா, சந்தானம் உடன் அவர் செய்த காமெடி நல்ல வரவேற்பை பெற்றது.

2010 களின் முடிவில், தமிழ் திரையுலகில் இயக்க செலவுகள் அதிகரித்தால்  ஸ்டுடியோ தற்போது பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருந்தது. 62 வயதான வி. சுவாமிநாதன் கரோனா பாதிப்பால் 2020 ல் மரணமடைந்து விட்டார். 

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top