தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனரும் பாடகரும் இசை கலைஞரும் ஆன பல்துறை வித்தகர் டி ராஜேந்திரன் திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் குதித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.
இவர் இப்போது தன் பெயரை விஜய டி ராஜேந்தர் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். அறிஞர் அண்ணாவிற்கு அடுத்ததாக அடுக்கு மொழி பேசுவதில் வல்லவராக திகழும் இவர் திமுகவில் இணைந்து அரசியல் பணியை செய்தார்.
பிரபல இசையமைப்பாளரின் வாழ்க்கையை துவம்சம் செய்த டி ராஜேந்தர்..
திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்பட்ட டி ஆர் பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து திமுகவில் இருந்து விலகி தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை துவங்கி நடத்தினார்.
1980 என்பதில் ஒரு தலை ராகம் துவங்கி பல்வேறு திரைப்படங்களில் நடித்து பாடல்கள் அமைத்து பாடி தனது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி இருக்கும் இவர் 2017-இல் விழித்திரு என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இவரைப் போலவே தமிழில் மிகச் சிறந்த பின்னணி பாடகராக திகழ்ந்த டி எம் சௌந்தரராஜன் பழைய பேட்டி ஒன்றில் டிஆர் பற்றி கூறியிருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
டி ஆர் சௌந்தர்ராஜன் சொன்ன விஷயம்..
தமிழக மக்களின் உள்ளங்களை தனது பாடல்களின் மூலம் கவர்ந்து ஈர்த்த டி எம் சௌந்தரராஜன் பல்வேறு வகையான பாடல்களை பாடி தனித்துவம் மிக்க பின்னணி பாடகராக திகழ்கிறார்.
இந்தப் பாடகர் இடம் நடிகர் டி.ஆர். ராஜேந்திரன் ஒரு பாடலை பாடச் சொல்லி வற்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த பாடலை பாட வைத்திருக்கிறார். அந்த பாடல் நான் ஒரு ராசி இல்லாத ராஜா என்று துவங்கும் பாடல் தான்.
இந்தப் பாடலை பாடி முடித்து படம் என்னவோ மிகப்பெரிய வெற்றியை பெற்று இயக்குனர் நல்ல பெயரை பெற்றுக்கொண்டார். எனினும் அந்தப் பாடல் பாடிய எனக்கு அதன் பிறகு அதிக அளவு வாய்ப்புக்கள் வரவேயில்லை என் கேரியரை காலி பண்ணியது டி.ஆர். ராஜேந்திரன் என்ற தகவலை சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த பழைய பேட்டியில் சொன்ன விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் உறைந்திருப்பதோடு மட்டுமல்லாமல் டி ஆர் ராஜேந்திரன் டி எம் சௌந்தர்ராஜன் கேரியரை காலி ஆகிவிட்டாரா? என்று பேசி வருகிறார்கள்.