Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படங்கள் பட்டியல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படங்கள் பட்டியல்

2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக கிட்டத்தட்ட திரையரங்குகள் அந்த வருடம் முழுதும் மூடியே கிடந்தன. இதனால் சினிமா தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

மேலும் படப்பிடிப்புகள் நடத்துவதற்கும் கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்கள் நானும் உதவி செய்கிறேன் என்று சில மூட்டை அரிசி மளிகை பொருட்களை ஒரு முறை கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

அதை தொடர்ந்து தாக்கம் மெல்ல மெல்ல குறைய சில தகவல்களுடன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரையரங்கங்கள் திறக்கப்பட்டன. 50% இருக்கைகளுடன் படம் திரையிடுவதை தொடங்கலாம் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுடன் இயங்கியது.

இதனைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியாகி பிடித்த டாப் 7 படங்களின் பட்டியலை தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்

07.அரண்மனை 3

அரண்மனை 1 மற்றும் அரண்மனை 2 ஆகிய திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் அரண்மனை 3 அதே அரண்மனையில் பேய் வீடு இருக்கும் சில கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி எந்த ஒரு பெரிய வித்தியாசம் இல்லாமல் அப்படியே இந்த படத்தை கொடுத்திருந்தார் போட்டிக்கு எந்த படமும் வராததால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

06.சுல்தான்

ரெமோ படத்தின் மூலம் இயக்குனரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம்தான் சுல்தான் படம் பார்ப்பதற்கு தெலுங்கு படம் போல தெரிந்தாலும் ரசிகர்களுக்கு பயங்கர என்டர்டெயின்மென்ட் இருந்த படம் இது இந்த படத்தில் இடம் பெற்ற வாசல்தான் வாசுதேவா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது கார்த்தியின் ஆக்சன் மற்றும் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது

05.மாநாடு

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹிட் படம் என்றால் அது மாநாடு என்று தான் கூற வேண்டும் படத்தின் கதை திரைக்கதை என அனைத்தும் தமிழ் சினிமாவிற்கு புதிதாகவும் ரசிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால் இந்த படம் ஹிட் பட்டியலில் இணைந்தது இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து இருந்தது இந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம்.

04.கர்ணன்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியானது கர்ணன் திரைப்படம் இரண்டாவது படத்திலேயே தனுஷுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற மாரிசெல்வராஜ் அதனை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டு தொண்ணூறுகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்திருந்தார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ஹிட் பட்டியலில் லிஸ்டில் சேர்ந்தது

03.டாக்டர்

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருந்தது படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு இன்னும் வெறியேற்றியது இந்த படம் வியாபார ரீதியாக பயங்கர வெற்றியை பெற்றது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்

02.அண்ணாத்த

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது நடிகை குஷ்பு மீனா கீர்த்தி சுரேஷ் என இயக்குனர் சிறுத்தை சிவா அதற்கு கிடைத்த இந்த பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றால் அது கேள்விக்குறிதான்.

காலம் காலமாக தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த ஒரு கதையை எடுத்து வந்து படமாக எடுத்து வைத்திருந்தார் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏதோ மெகாசீரியல் பார்த்ததைப் போன்ற உணவுகளையும் கிடைத்தது என கூறினார்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மார்க்கெட் இந்த படத்தை தூக்கி நிறுத்தியது போட்ட பணத்தை எடுத்தார் தயாரிப்பாளர் இந்த பட்டியலில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற பட்டியலில் அண்ணாத்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

01.மாஸ்டர்

அந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியானது மாஸ்டர் திரைப்படம் கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இரண்டு பெரிய நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் கூற வேண்டும் இந்த படம் பொதுவான சினிமா செய்திகள் வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு திருப்தியான படமாக இந்த படம் இருந்தது இதனால் இந்த படம் வெற்றியும் அடைந்தது இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Popular Articles

To Top