தமிழ் சினிமாவில் அந்த விஷயத்தில் மோசமா இருக்காங்க.. சிவகார்த்திகேயனால் கடுப்பான நடிகர்..!

தமிழில் மட்டுமல்லாமல் தற்சமயம் தென்னிந்தியா முழுவதுமே வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்ன திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற துவங்கினார்.

அவரே இது குறித்து பேட்டியில் கூறும் பொழுது ஆச்சரியமாகதான் பேசி இருக்கிறார். அவர் பேட்டியில் கூறும் பொழுது சினிமாவிற்கு முதன்முதலாக வரும்பொழுது எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து விடுவோம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். அதிகபட்சம் காமெடியனாக வேண்டும் என்பதுதான் அப்பொழுது எனது இலக்காக இருந்தது.

நான் கதாநாயகனாக மாறுவேன் என்றெல்லாம் நான் நினைத்து கூட பார்க்கவில்லை ஆனால் நீங்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக இப்பொழுது சினிமாவில் பெரிய உயரத்தை தொட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த விஷயத்தில் மோசமா இருக்காங்க

அந்த அளவிற்கு கடுமையாக முயற்சி செய்து சினிமாவில் இப்பொழுது பெரும் இடத்தை பிடித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அமரன் திரைப்படம் அவரது திரை பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sk

ஏனெனில் இந்த திரைப்படத்தில் அந்த அளவிற்கு சீரியஸான கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்தது கிடையாது இந்நிலையில் இந்த திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்கிற்கு வரவிருக்கிறது.

இந்த திரைப்படத்தை விமர்சித்து சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் பேசியிருக்கும் விஷயம் அதிக சர்ச்சையாகி வருகிறது. கிரண் அபாவரம் என்கிற தெலுங்கு நடிகர் தெலுங்கு சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.

சிவகார்த்திகேயனால் கடுப்பான நடிகர்

இதுவரை மொத்தமாக ஒரு பத்து படம் கூட இவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். அதிகபட்சம் இப்பொழுது அவருக்கு சின்ன பட்ஜெட்டில் உள்ள திரைப்படங்கள்தான் கிடைத்து வருகின்றன.

sivakarthikeyan

இந்த நிலையில் இவர் நடித்த கா என்கிற தெலுங்கு படமும் தீபாவளி அன்று தெலுங்கு சினிமாவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் ஆசைப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது பற்றி கேட்கும் கேட்கும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு விநியோகஸ்தர்களும் இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு தயாராக இல்லை ஏனெனில் தமிழிலேயே ஏற்கனவே பிரதர், அமரன் மற்றும் ப்ளடி பெக்கர் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன இவற்றிற்குள்ளே பெரும் போட்டிகள் இருக்கும் என்பதால் கா திரைப்படத்தை தமிழில் வெளியிட யாரும் முன் வரவில்லை.

நடிகருக்கு வந்த கோபம்:

இதனால் கடுப்பான அந்த தெலுங்கு நடிகர் தமிழ் சினிமா மோசமாக இருக்கிறது இவர்கள் தமிழ் படங்களை தெலுங்கில் விடுகிறார்கள் ஆனால் நம்முடைய திரைப்படத்தை வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ் சினிமா குறித்து அவதூறாக பேசியிருக்கிறார்.

amaran 2

ஏனெனில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படம் தெலுங்கிலும் தற்சமயம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அந்த நடிகர் பேசியிருக்கும் விஷயங்கள் தற்சமயம் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam