அவங்கக்கிட்ட பணம் வாங்குனது உண்மைதான்… மோசடி கும்பலுடன் தமன்னாவிற்கு தொடர்பு? நடந்தது என்ன?

சினிமா பிரபலங்கள் பொருட்களை விளம்பரம் செய்வது என்பது எல்லா காலங்களிலும் பிரச்சனையை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் பிரபல நடிகர்கள் நிறைய குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை விளம்பரம் செய்து வந்தனர்.

ஆனால் ஆரம்பத்தில் அது வருவாய் ஈட்டுவதாக இருந்தாலும் பிறகு அவர்களுக்கு அதிக பிரச்சனையை ஏற்படுத்தி கொடுத்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது கூட முன்பு விஜய் கோலா நிறுவனத்தின் பொருட்களை விளம்பரப்படுத்தியது குறித்து சர்ச்சைகள் உருவானது.

அவங்கக்கிட்ட பணம் வாங்குனது உண்மைதான்

அதனால் தமிழ் பிரபலங்கள் பெரும்பாலும் எந்த ஒரு பொருட்களையும் விளம்பரப்படுத்தி விளம்பரங்களில் நடிப்பது கிடையாது. விஜய் சேதுபதி மட்டும் தமிழ்நாட்டு தயாரிப்பு பொருட்களை விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தார்.

thamana 3

இப்பொழுது அவரும் எந்த விளம்பரத்திலும் நடிப்பது கிடையாது. இந்த நிலையில் தற்சமயம் நடிகைகள் அனைவரும் மோசடி செய்யும் சில நிறுவனங்களின் விளம்பரங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். ரம்மி மாதிரியான விளம்பரங்களில் நடிகைகள் நடித்திருப்பதை பார்க்க முடியும்.

மோசடி கும்பலுடன் தமன்னாவிற்கு தொடர்பு

இப்படியாக தற்சமயம் தமன்னா நடித்த விளம்பரம் ஒன்று அவருக்கு பெரிய பிரச்சனையை உருவாக்கி கொடுத்திருக்கிறது. பிட்காயின் எனக் கூறப்படும் முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்றில் தமன்னா நடித்திருந்தார். அந்த விளம்பரத்தின் மூலமாக அது அதிக பிரபலமானது.

thamana 2

நிறைய பேர் அதில் முதலீடும் செய்தனர். கடைசியில் அந்த நிறுவனம் அவர்களையெல்லாம் ஏமாற்றி விட்டது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தை வலை வீசி தேடி வருகின்றனர். அதே சமயம் அமலாக்கத்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமன்னாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றது.

பணத்தை திரும்ப தரேன்

ஆறு மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் தமன்னாவை பிறகு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விசாரணையில் என்ன நடந்தது என்று விசாரிக்கும் போது அந்த நிறுவனத்திடம் இருந்து தமன்னா எவ்வளவு பணம் வாங்கினார் என்பது குறித்துதான் விசாரணை நடந்தது.

thammana

இந்த விளம்பரத்திற்காக மட்டுமே கோடிகளில் பணம் வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டியிருந்தால் கொடுத்து விடுகிறேன் என்று தமன்னா கூறிய நிலையில் அவரை அனுப்பி வைத்திருக்கின்றனர் துறையினர் என தகவல் கசிந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam