சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் திரிஷாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார். நீங்கள் கல்லூரியில் படிக்கும் போது கொடுத்த ஒரு பேட்டியில் சினிமாவில் நடிப்பது எனக்கு பிடிக்காது. கண்டிப்பாக நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்தீர்கள்.
ஆனால், ஒரு கட்டத்தில் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியான நடிகையாக மாறிவிட்டீர்கள். ஏன் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினீர்கள். தற்போது, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்..? என்ற கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து நடிக்க திரிஷா, ஆரம்பத்தில் சினிமா துறையை கண்டு நான் பயப்பட்டேன். அதுதான் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு முக்கியமான காரணம். அதேபோல நான் ஆரம்பத்தில் நடித்த படங்களில் நடிக்கும் போது நான் மிகுந்த பயந்த சுபாவத்துடன் இருந்தேன்.
இந்த படத்தில் நடித்து முடித்து விட்டால் போதும் நாம் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று சூழலில் தான் இருந்தேன். ஆனால், நான் நடித்த ஒரு திரைப்படம் ஹிட்டானது. அது என்ன படம் என்று நான் சொல்லவில்லை. மிகப்பெரிய ஹிட் அந்த திரைப்படம்.
அதன் பிறகு சினிமா துறையில் எனக்கு கிடைத்த மரியாதை, எனக்கு கிடைத்த வரவேற்பு, எனக்கு கிடைத்த பாதுகாப்பு இதெல்லாம் தான் தொடர்ந்து என்னை சினிமாவில் நடிக்க வைத்தது. நான் மட்டுமல்ல வேறு எந்த நடிகையாக இருந்தாலும் அவர் ஒரே ஒரு ஹிட் படத்தில் நடித்து விட்டால் அவருக்கு கிடைக்க கூடிய எல்லா விஷயமும் மாறிவிடும்.
நான் கல்லூரியில் நடிக்கும் போது அந்த நடிகரை பார்த்து ரசித்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு என்னிடம் சிலர் அந்த நடிகரைப் பற்றி பல விஷயங்களை கூறினார்கள். அதன் பிறகு அந்த நடிகரின் மீது எனக்கு ஒரு பயம் வர ஆரம்பித்துவிட்டது.
ஒரு கட்டத்தில் அவருடைய படத்திலேயே நான் ஹீரோயினாக நடித்தேன். அப்போது அவரிடம் பேசிய விதம் நான் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு மரியாதையாக பேசினார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னுடைய ஒரு ஹிட் படம் தான். அந்த படம் கொடுத்த வெற்றி ரசிகர்களுக்கு மத்தியில் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. ரசிகர்களால் எனக்கு அந்த மரியாதை கிடைத்தது.
அந்த படம் வெளியான பிறகு ஒரே இரவில் எல்லாமே மாறியது போல் இருந்தது. என்னால் அந்த அந்த புகழையும், எனக்கு கிடைக்கும் மரியாதையையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. அதனை கையாளக்கூடிய பக்குவம் அப்போது எனக்கு இல்லை. இதை நினைத்து கதறி அழுத்திருக்கிறேன்.
ஏதாவது ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்து விடாதா..? என்று சாதாரண ஒரு பெண்ணாக வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தபோது எனக்கு ரசிகர்கள் கொடுத்த அந்த மிகப்பெரிய அங்கீகாரம் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது.
இதை நினைத்து நான் பல நாட்கள் கதறி இருக்கிறேன். இதை எப்படி தெளிவாக சொல்வது என எனக்கு தெரியவில்லை. சினிமாவில் நடிக்கவே கூடாது என்று நான் நினைத்ததற்கு காரணம் சினிமா மீதும் சினிமா துறையில் இருக்கக்கூடியவர்கள் மீதும் இருந்த பயம் தான்.
ஆனால், என்னுடைய ஒரு படம் ஹிட்டான பிறகு அந்த பயம் முழுதாக போய்விட்டது. சினிமா துறையில் அனைவரும் என்னை மரியாதையாக நடத்தினார்கள். நான் சொல்வதை காது கொடுத்து கேட்டார்கள். படத்தில் என்ன இருக்க வேண்டும் என்ன இருக்கக் கூடாது என சொல்வதற்கு ஒரு உரிமையை எனக்கு கொடுத்தார்கள்.
அந்த ஹிட் படத்தில் நடிக்கும் வரை அவர்கள் சொல்வது தான் சட்டம்… அவர்கள் சொல்வதை தான் நான் செய்ய வேண்டும்.. நானாக எதையும் சொல்ல முடியாது ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்த பிறகு நான் எதை சொன்னாலும் படக்குழுவினர் கவனித்தார்கள். தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். இயக்குனர்கள் செவி கொடுத்தார்கள்.
அதுதான் என்னை தொடர்ந்து படங்களில் நடிக்க வைத்தது மற்றபடி வேறு எதுவும் கிடையாது நான் நடித்த அந்த படத்தை வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கு தான் நான் நன்றி என பேசியுள்ளார் நடிகை திரிஷா.
Loading ...
- See Poll Result