Connect with us

சினிமா செய்திகள்

விடாமுயற்சி படத்திற்கு திரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? ஆத்தாடி..!

By Ashik MFebruar 1, 2025 3:01 AM IST

நடிகை திரிஷா, கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள «விடாமுயற்சி» திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்ததற்காக திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திரிஷாவின் திரைப்பயணம்

ஜோடி படத்தில் சிறிய வேடத்தில் தலை காட்டிய திரிஷா, பின்னர் ஹீரோயினாக மாறினார். வரிசையாக வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. தனது திறமையால் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

வாய்ப்புகள் குறைந்த காலம்

திடீரென சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து போயின. அவரது கரியர் முடிந்துவிட்டது என்று சிலர் கூறினர். ஆனால், «96» படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

அடுத்த படங்கள்

«96»க்கு பிறகு «பொன்னியின் செல்வன்» படமும் அவருக்கு பெரிதும் உதவியது. தற்போது கமல் ஹாசனுடன் «தக் லைஃப்», தெலுங்கில் «விஸ்வம்பரா», தமிழில் «விடாமுயற்சி», «குட் பேட் அக்லி» என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

«விடாமுயற்சி» படத்தில் சம்பளம்

«விடாமுயற்சி» படத்தில் அஜித்துடன் ஐந்தாவது முறையாக இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்படத்திற்காக அவர் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிஷாவின் சம்பள சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. «விடாமுயற்சி» படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top