பிரபல நடிகை ஊர்வசி, தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். குடிப்பழக்கம் மற்றும் திருமண வாழ்க்கை முறிவு குறித்து அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
குடிப்பழக்கத்திற்கு அடிமை
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஊர்வசி, மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கே. பாக்யராஜ் இயக்கிய «முந்தானை முடிச்சு» படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
90களில் முன்னணி நடிகையாக இருந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் மனோஜ் கே. ஜெயனை திருமணம் செய்துகொண்ட ஊர்வசிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்திய பேட்டியில், தனது முதல் திருமண வாழ்க்கை முறிவு குறித்து பேசிய ஊர்வசி, நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். என் கணவரே எனக்கு ஊற்றி கொடுத்தார். அவரது குடும்பத்தில் அனைவருமே வட்டமாக அமர்ந்து கொண்டு ஒன்றாக குடிப்பார்கள்.
தினமும் குடித்து குடித்து நான் குடிக்கு அடிமையாகி விட்டேன். என்னை குடிக்கு அடிமையாக்கியதே அவர் தான். அதுவே, நாங்கள் பிரிய காரணமாக அமைந்தது» என்று கூறியுள்ளார்.
இரண்டாம் திருமணம்
«அதே குடியை காரணம் காட்டி என் மகளையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டார். அப்போது நான் தனிமையில் மனஅழுத்தத்தில் இருந்தேன். அப்போது தான், எங்களுடைய குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.
எனக்கு இரண்டாவது திருமணம் ஆகும் போது 40 வயது இருக்கும். 40 வயதில் திருமணமா? என்று பலர் என்னை விமர்சித்தார்கள். ஆனால், அதை எல்லாம் நான் என் காதில் வாங்கி கொள்ளவில்லை. தற்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்» என்று ஊர்வசி கூறியுள்ளார்.
ஊர்வசியின் இந்த பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வெளிப்படையான பேச்சு பலராலும் பாராட்டப்படுகிறது.
Loading ...
- See Poll Result