நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில், இயக்குனர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் ஒரு கதையைக் கூறி அந்த படத்தில் நடிக்கிறீர்களா..? என்று கேட்டார். அப்போது அந்தக் கதை எனக்கு செட்டாகாது என சொல்லி மறுத்து விட்டேன்.
அதன்பிறகு, என்னுடைய தோழி ஒருவர் எனக்கு என்னை தொடர்பு கொண்டு எதற்காக அந்த இயக்குனரின் கதையை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்தாய்.. அது அவ்வளவு அற்புதமான கதையாச்சே.. நீ வேணும்னா மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார் என்று கூறினார்.
அதன்பிறகு அந்த இயக்குனருக்கு நான் போன் செய்து.. சார் நீங்க சொன்ன கதையை நேரில் வந்து சொல்ல முடியுமா..? என்று கேட்டேன். அவரும் நேரில் வந்து கதையை விரிவாக கூறினார்.
அவர் போனில் சொன்னதை நேரில் இன்னும் விரிவாக கூறினார்.. அருமையான கதையாக இருந்தது. நான் நடிக்கிறேன் என உடனே சொல்லி விட்டேன். அப்போது அந்த இயக்குனர் என்னிடம் ஒரு விஷயம் கூறினார்.
நான் இன்று வேறு ஒரு நடிகைக்கு அட்வான்ஸ் கொடுக்க இருந்தேன். நீங்கள் ஒப்புக்கொண்டதால் உங்களை வைத்து அந்த படத்தை இயக்குகிறேன் என கூறினார்.
அவர் அட்வான்ஸ் கொடுப்பதாக இருந்த நடிகை யார் என்று கேட்டபோது ரித்திகா சிங் என்று கூறினார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. சத்தியமாக அவர் ரித்திகா சிஙகிடம் தான் கதை சொன்னார் என்று எனக்கு முன்னரே தெரியாது.
அப்போது, சார் நீங்கள் ரித்திகா சிங்கை வைத்து படம் செய்வதென்றால் தாராளமாக செய்யுங்கள். நான் அவருடைய வேலையை கெடுத்தது போல் ஆகிவிடப் போகிறது. சத்தியமாக நீங்கள் ரித்திகா சிங்கிடம் ஏற்கனவே இந்த கதையை சொல்லிவிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.
இந்த கதையை ரித்திகா சிங்கை வைத்து நீங்கள் எடுப்பதாக இருந்தால் நீங்கள் அவரை வைத்தே எடுங்கள். அவருக்கும் இந்த கதை பொருத்தமாக இருக்கும் என கூறினேன்.
அதன் பிறகு என்னையே அந்த படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு, இப்போது வரை நான் ரித்திகா சிங்கிடம் பேசவே இல்லை என கதறி இருக்கிறார் நடிகை வாணி போஜன்.
Loading ...
- See Poll Result