Connect with us

சினிமா செய்திகள்

அப்படினா உங்க மனைவி பத்தினி இல்லையா வெற்றிமாறன்.. கேட்டது யாருன்னு தெரியுமா..?

Published on : January 28, 2025 12:58 PM Modified on : January 28, 2025 12:58 PM

பெண்கள் முன்னேற்றம் பெண் சுதந்திரம் என்ற போர்வையில் BAD GIRL என்ற ஒரு திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார்.

பெண் இயக்குனர் வர்ஷா என்பவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் டீச்சர் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிக்கு செல்லும் சிறுமி தன்னுடைய பெற்றோரின் கட்டுப்பாடுகளை மீறி தன்னுடைய விருப்பப்படி தான் வாழ்வேன் ஆண் நண்பரை வைத்துக் கொள்வேன்.. அவனுடன் உடலுறவு கொள்வேன்.. மது குடிப்பேன்.. புகை பிடிப்பேன்.. இது என் சுதந்திரம்.. இதை தடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறுகிறாள்.

அந்த பெண்தான் இந்த படத்தின் கதாநாயகி. அந்த பெண்ணை பிராமணர் சமூகத்தை சேர்ந்த பெண்ணாக காட்டியிருக்கிறார்கள். இது பல்வேறு கருத்து மோதல்களை இணைய பக்கங்களிலும் பொதுவெளியில் உண்டாக்கி வருகிறது.

இந்த படத்தின் இயக்குனர் வர்ஷா மேடையில் பேசும்போது பெண்கள் என்றால் பூ, தெய்வம், பத்தினி என்று உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். உண்மையாக பெண்கள் அப்படி எல்லாம் இருக்க தேவையில்லை என்று கூறுகிறார்.

இதை கேட்ட வெற்றிமாறன் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். இப்படியான வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ரம்யா மோகன் என்ற ஒரு பெண்.. அந்த இயக்குனர் பேசுவதற்கு நீங்கள் சிரிக்கிறீர்கள்..? அப்படி என்றால் உங்களுடைய மனைவி பத்தினி இல்லையா..? வெற்றிமாறன் என்று கேள்வி எழுப்பும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படியாக இந்த படத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைத்த முன்வைக்கப்பட்டு வருகின்றன. மறுபக்கம் இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தை ஆகா ஓகோ என புகழ்ந்து தன்னுடைய twitter பதத்தில் பாராட்டு மழை பொழிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

More in சினிமா செய்திகள்

To Top