Connect with us

சினிமா செய்திகள்

விடாமுயற்சி எத்தனை திரைகளில் வெளியாகிறது தெரியுமா..? தாறு மாறு அப்டேட்..!

By TamizhakamJanuar 31, 2025 3:05 PM IST

அஜித்தின் «விடாமுயற்சி» திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் வெளியாகவுள்ள திரையரங்குகளின் விவரம்:

  • தமிழ்நாடு – 900+
  • கேரளா – 250+
  • கர்நாடகா – 250+
  • ஆந்திரா, தெலுங்கானா – 500+
  • மற்ற இடங்கள் – 250+
  • வெளிநாடுகள் – 1500+
  • மொத்தம் – 3650+

«வலிமை» படத்திற்குப் பிறகு தமிழகத்தில் அதிக திரைகளில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Ajith’s «Vidaa Muyarchi» is one of the most anticipated Tamil films. Directed by Magizh Thirumeni, the action thriller stars Ajith Kumar, Trisha, Arjun, and Aarav, with music by Anirudh. It’s set to releasing in over 900 screens in Tamil Nadu alone. Globally, it will be shown in over 3650 screens.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top