vijay antony october october
#image_title

ஹீரோயினோட அந்த மாதிரி பண்ணவா..? விஜய் ஆண்டனி சர்ச்சை பேச்சு..!

தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனியை பொருத்தவரை அவர் எல்லா விதமான நடிப்பையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு நடிகர் கிடையாது.

சொல்லப்போனால் காதல் காட்சிகள் போன்ற விஷயங்கள் எல்லாம் அவ்வளவாக விஜய் ஆண்டனிக்கு வராது. அதனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் எல்லாம் பெரும்பாலும் அந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வார்.

ஹீரோயினோட அந்த மாதிரி

அவர் நடித்த நான், சலீம் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகனுக்கு சுத்தமாக உணர்ச்சியே இல்லாத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். அது விஜய் ஆண்டனிக்கு நன்றாகவே செட்டாகி இருப்பதால் அந்த திரைப்படம் எல்லாமே நன்றாக வெற்றியை கொடுத்து விட்டன.

vijay antony october october
#image_title

ஆனால் காமெடி அல்லது காதல் என்று விஜய் ஆண்டனி செல்லும் பொழுது அதற்கு பெரிதாக வெற்றி கிடைக்காது. அதனால்தான் பிச்சைக்காரன் திரைப்படத்தில் கூட காதல் கதை படத்திலிருக்கும். ஆனால் அதை பெரிதாகக் கொண்டு சென்றிருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து திரைப்படங்களில் காதல் தொடர்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏற்கனவே ரோமியோ என்கிற ஒரு திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

விஜய் ஆண்டனி சர்ச்சை பேச்சு

ந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை கொடுக்கவில்லை இந்த நிலையில் தற்சமயம் ஹிட்லர் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் முதல் பாதி முழுக்கவும் காதல் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியே இது குறித்து பேட்டிகளில் பேசும்பொழுது இந்த திரைப்படத்தில் மிகவும் மெனக்கெட்டு காதல் காட்சிகளில் நடிக்க முயற்சி செய்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள் என்று கூறியிருந்தார்.

vijay antony october october
#image_title

அந்த அளவிற்கு இதில் வரும் காதல் காட்சிகள் குறித்து எதிர்பார்ப்புடன் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் ஹிட்லர் திரைப்படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த பொழுது அதில் ஒரு பெண் பத்திரிக்கையாளர் விஜய் ஆண்டனியிடம் கேட்கும் பொழுது படத்தில் காதல் காட்சிகள் வைக்கப்பட்டது.

குறித்து கேட்டிருந்தனர் அப்பொழுது அவர் ஆமாம் இந்த திரைப்படத்தில் தான் கொஞ்சம் முயற்சி செய்து அந்த காட்சிகளை வைத்திருக்கிறோம் என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் நிருபர் ஆனாலும் மிகவும் நாகரிகமாக தான் அந்த காட்சிகள் எல்லாம் இருந்தன என்று கூறியிருந்தார் அதற்கு பதில் அளித்து விஜய் ஆண்டனி வேண்டுமென்றால் அடுத்த நடிக்கும் திரைப்படங்களில் அநாகரிகமான காட்சிகளை வைக்கலாமா? என்று காமெடியாக கேட்டிருந்தார் அதற்கு அந்த பத்திரிகையாளர் வேண்டாம் என்று கூறியிருந்தார் இருந்தாலும் விஜய் ஆண்டனி உன்னை விட இப்பொழுது மிகவும் கொசும்பாக பேசுகிறார் என்று இது குறித்து பதில் அளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்

--- Advertisement ---

Check Also

ilaiyaraaja october october

பாலு மகேந்திராவால் வஞ்சிக்கப்பட்ட இளையராஜா.. சமயம் பார்த்து தட்டி தூக்கிய ஏ ஆர் ரகுமான்..

சினிமா கலைஞர்களுக்கு விருது என்பது அவர்களை மகிழ்விக்க கூடிய விஷயம் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் பல படைப்புக்களை …