Connect with us

சினிமா செய்திகள்

மனைவியிடம் அனுமதி வாங்கி வேறு பெண்ணிடம் அதை செய்த விஜய் ஆண்டனி..! இதை என்னன்னு சொல்றது..!

By Brindha IyerSeptember 30, 2024 10:00 AM IST

முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி 1975 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிறந்தவர். இவர் பழம் தரும் எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலி பொறியாளராக பணி புரிந்ததை அடுத்து இசையமைப்பாளராக மாறினார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு இவரை ஆடியோ பைல்ஸ் என்ற ஒரு ஒலி அரங்கை நிறுவி தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப் படங்களுக்கும் ஜிங்கில்ஸை அமைத்தார்.

அனுமதி வாங்கி வேறு பெண்ணிடம் அதை செய்த விஜய் ஆண்டனி..

இதனை அடுத்து இவருக்கு கன்னட படத்திற்கு இசையமைக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டியவர் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தில் தனது இயல்பான நடிப்பை காட்டி தமிழ் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சுக்கிரன், பை 2, டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, பந்தயம், காதலில் விழுந்தேன், மரியாதை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற படங்களில் இவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர்.

இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது தொகுப்பாளினி இவரிடம் தங்கள் மனைவியை காதலித்த போது எப்படி ப்ரபோஸ் செய்தீர்கள் என்ற கேள்வியை கேட்டார்கள். அதற்கு இவர் செய்த விதத்தைப் பார்த்து அரங்கமே அதிர்ந்து போய்விட்டது.

தன் மனைவியிடம் எப்படி ப்ரபோஸ் செய்தார் என்பதை டெமோவாக செய்து காட்ட விரும்பிய விஜய் ஆண்டனி அதற்காக தன் மனைவியிடமே பர்மிஷன் கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.

இதை என்னன்னு சொல்றது..

மேலும் அந்தத் தொகுப்பாளினியை தன் மனைவியாக நினைத்துக் கொண்டு அவர் எப்படி ப்ரபோஸ் செய்தார் என்பதை அழகான முறையில் நடித்துக் காட்டினார்.

அதற்காக முதலில் அந்த தொகுப்பாளினியிடம் உங்க வீட்ல உங்களுக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்களா? அப்படி பார்த்துகிட்டு இருந்தா அந்த லிஸ்ட்ல என்ன சேர்த்துக்கோங்க என்று சொன்னதாக சொன்னார்.

இப்படித்தான் தனது காதலை தன் காதல் மனைவிடம் பிரபோஸ் செய்ததாக விஜய் ஆண்டனி கூறியதை அடுத்து அனைவரும் ஆச்சிரியத்தில் உறைந்து போனார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு விஜய் ஆண்டனி வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top