Connect with us

சினிமா செய்திகள்

இது தான் Twistey.. விஜய் எம்.ஜி.ஆர் என்றால்.. ? இவரு தான் எம்.ஆர்.ராதா..! பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..!

By TamizhakamJanuar 29, 2025 1:06 PM IST

விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். அண்மையில் வெளியான அவரது திரைப்பட போஸ்டர் ஒன்று இதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகம் திரைப்படத்தில் புரட்சித் தலைவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நடிப்பில் கடந்த 1966 ஆம் ஆண்டு வெளியான «நான் ஆணையிட்டால்» என்ற படத்தில் புரட்சித் தலைவர் சாட்டை சுழற்றுவது போன்று தன்னுடைய கையிலும் ஒரு சாட்டையை வைத்துக்கொண்டு சுழற்றியபடி போஸ்டர்கள் வெளியாகின.

அரசியலுக்குள் நுழையும் நடிகர்கள் அனைவரும் «நான்தான் அடுத்த எம்ஜிஆர்» என்பதைச் சொல்லும் விதமாக எம்ஜிஆர் செய்த விஷயங்களைச் செய்வது உதாரணமாக எம்ஜிஆர் போலவே தொப்பி அணிந்து கொள்வது, எம்ஜிஆர் பேசிய வசனங்களைப் பேசுவது போன்ற விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்த ஒன்று.

அதேபோல நடிகர் விஜய்யும் சாட்டையை சுழற்றியபடி «நான்தான் அடுத்த எம்ஜிஆர்» என்பதை மறைமுகமாக கூறுவது போன்று போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் «நீங்கள் எம்ஜிஆர் என்றால் உதயநிதி ஸ்டாலின் தான் எம்.ஆர். ராதா» என்று மீம்களைப் பறக்க விட்டு வருகின்றனர்.

இந்த போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், ஒரு சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது என்றும், வெகு விரைவில் அவர் அரசியல் களத்தில் குதிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top