துணை நடிகை மல்லிகா பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் மல்லிகா.
அவர் கூறியதாவது சர்க்கார் படத்தில் விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே முருகதாஸ் சார் என்னை பார்த்துவிட்டு எனக்கு ஒரு டயலாக் கொடுத்தார்.
அப்போது என்னுடைய வீட்டில் தனிப்பட்ட பிரச்சனை மிகுந்த சோகத்தில் இருந்தேன். அந்த டயலாக்கை பேசுவதற்கு எனக்கு சிரமமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன். என்னடா இது இவ்வளவு தூரம் வந்து டயலாக் வரமாட்டேங்குதே.. என்ன பண்றதுன்னு தெரியாம நான் அமர்ந்திருந்தேன்.
கடவுளே என்று இருக்கக்கூடிய எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டிருந்தேன். அடுத்த நிமிடம் முருகதாஸ் சார் வந்தார். அம்மா உங்களுக்கு டயலாக் எல்லாம் எதுவும் இல்லை.. விஜய் சார் உங்களை தூக்கிக்கிட்டு நடிக்கிறார் அவ்வளவுதான் என்று கூறினார்.
எனக்கு தூக்கி வாரி போட்டது விஜய் சார் என்னை தூக்கிக்கொண்டு நடிக்கிறாரா..? பொதுவாக நடிகர்கள் ஹீரோயினை தூக்கிக்கொண்டு நடிப்பதையே மறுப்பார்கள்… இன்னும் சில நடிகர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு நடிப்பதை கூட கஷ்டம் என கூறியதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்..
ஆனால், விஜய் சார் என்னை தூக்கிக்கொண்டு நடிப்பாரா..? என்று எனக்குள் கேள்வி இருந்தது. அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. படப்பிடிப்பு தளத்துக்கு சென்றோம்.
ஒரே டேக்கில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. நான் பயந்து கொண்டு நின்று கொண்டிருந்தேன். விஜய் சார் என்னை பார்த்து பயப்படாதீங்கம்மா.. நீங்க நல்லா என்னுடைய தோளில் கை போட்டு பிடிச்சுக்கோங்க.. கீழே விழுந்துட போறீங்க.. என்று கூறினார்.
சரி என்று நானும் அவர் சொன்னது போலவே செய்தேன்.. எத்தனையோ நடிகர்கள் ஒரு குழந்தையை தூக்கி நடிக்க.. ஹீரோயினை தூக்கி நடிக்க கூட முடியாது என சொல்லும்போது விஜய் சார் என்னை தூக்கிக்கொண்டு நடித்ததெல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அதுவும் விஜய் சாரிடம் அப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு எளிமையான ஒரு மனிதர். படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் அவர் மிகவும் சகஜமாக பழகுவார். அவர் நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்ந்துகிறேன் என கண்ணீர் மல்க பேசி இருக்கிறார் துணை நடிகை மல்லிகா.
Loading ...
- See Poll Result