சங்கமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விந்தியா அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது அரசியல் கட்சி ஒன்றில் நட்சத்திர பேச்சாளராக பயணித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது youtube ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
அதில் இருந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் கூறியதாவது ,நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ரிதம் திரைப்படத்தில் ஜோதிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிப்பதாக இருந்தது.
அதற்காக என்னை ஃபோட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த புகைப்படங்களை இயக்குனர் சுரேஷ் சந்திரா சாரும் பார்த்திருக்கிறார். நான் என்னுடைய சங்கமம் படத்திற்கு ஒரு புது முகத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இவர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் இவரை ஏன் இந்த ரிதம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறீர்கள் நான் முழு நீளப்படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறேன் என்று இயக்குனர் வசந்த் அவர்களிடம் கூறினார்.
மேலும், என்னிடம் எனக்கு உங்களுடைய கால்ஷீட் கொடுங்கள் என கேட்டார். ஆனால், ரிதம் படத்தின் இயக்குனர் வசந்த் என்னிடம்.. நான் தான் உன்னை அறிமுகப்படுத்துவேன்.. அந்த (சங்கமம்) படத்தில் நடித்தால்.. இந்த (ரிதம்) படத்தில் உனக்கு வாய்ப்பு கிடைக்காது. உனக்கு சம்மதமா..? என்று செல்லமாக மிரட்டினார்.
நான் யோசித்துப் பார்த்தேன். ஒரு படத்தில் ஹீரோயினாக நடிப்பது சரியா..? அல்லது, ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாவது சரியா..? என்று யோசித்தபோது ஹீரோயினாக நடிக்கிறேன் என்று எனக்கு தோன்றியது.
அதன் பிறகு ரிதம் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று அட்ஜஸ்ட் செய்து கொண்டு சங்கமம் படத்தில் நடித்தேன். அதனால், ஜோதிகாவுக்கு ரிதம் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதன் முதலில் பட வாய்ப்பு என கூறி ரிதம் படத்திற்காகத்தான் என்னை போட்டோ எடுத்தார்கள் என கூறியிருக்கிறார் நடிகை விந்தியா.
Loading ...
- See Poll Result