Connect with us

சினிமா செய்திகள்

«டேய் நாயே.. சரியான தொல்லை புடிச்சவன்டா நீயி..» மதகஜராஜா நடிகரை கழுவி ஊத்திய விஷ்ணுவரதன்..!

By TamizhakamJanuar 21, 2025 5:27 PM IST

இயக்குனர் விஷ்ணுவர்தன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுனாமி வருவதற்கு முதல் நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, அறிந்தும் அறியாமலும் படத்தில் திதி கொடுக்கக் கூடிய ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.

அந்த காட்சியை படமாக்குவதற்காக ஈசிஆரின் ஒரு கடற்கரையில் எல்லா ஏற்பாடும் செய்திருந்தோம். அதற்கு முதல் நாள் இரவு என் மனதுக்குள் ஏதோ ஒரு சஞ்சலம். சலனம்… எதோ ஒன்று என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது..

உடனே.. அந்த இடத்தில் வேண்டாம். வேறு இடத்தில் அந்த திதி கொடுக்கக்கூடிய காட்சியை வைத்துக் கொள்ளலாம் என எனக்கு தோன்றியது. அதன் பிறகு அதே இசிஆர்-இல் பிரகாஷ்ராஜ் சார் உடைய கடற்கரை பங்களா ஒன்று இருக்கிறது. அங்கே ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

உடனடியாக என்னுடைய மேனேஜருக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறினேன். சார் நீங்கள் ஏற்கனவே சொன்ன இடத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மாற்றக் கூறுகிறீர்கள்..? முக்கால் வாசி வேலைகள் முடிந்து விட்டது என கூறினார்கள்.

ஆனால், நான் வேண்டாம்.. அந்த இடத்தில் வேண்டாம்.. பிரகாஷ்ராஜ் சார் வீட்டின் முன்பு எடுக்க முடியுமா..? என்று கேளுங்கள் அங்கே இடம் இருந்தால் அங்கேயே சூட்டிங் செய்து கொள்ளலாம் என கூறினேன்.

அதன் பிறகு அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் அங்கே படப்பிடிப்புக்கு செல்கிறோம். எல்லோரும் கடல் பொங்குது கடல் பொங்குது என ஓடி வருகிறார்கள்.

என்னது கடல் பொங்குதா..? என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை.. அருகில் இருந்த ஆர்யா.. டேய் மச்சான் ஏதோ கடல் பொங்குதாம்.. வா போய் பார்த்துட்டு வரலாம் என்று கூறினான். அப்போது, டேய் நாயே.. ஊரே அலறிட்டு இருக்கு.. சரியான தொல்லை புடிச்சவன் டா நீயி.. என கூறினேன்.

அதன் பிறகு ஏதோ கடல் பொங்குது என கூறுகிறார்கள் ஒன்றும் புரியவில்லை என பைக் எடுத்துக் கொண்டு கடற்கரை நோக்கி சென்றோம். கடல் நீர் முழுதும் ஊருக்குள் வந்திருக்கிறது. அப்புறம் அங்கிருந்து தப்பித்தால் போதும் என படக்குழுவினருடன் நான் கிளம்பி வந்து விட்டேன்.

ஒருவேளை நான் முந்தைய நாள் நிச்சயித்த இடத்திலேயே படப்பிடிப்பை நடித்திருந்தால் பெரிய சிக்கல் ஆகியிருக்கும். ஏனென்றால் சுனாமி வரும் போது சட்டென அங்கிருந்து கிளம்ப முடியாதபடியான இடம் அது. அந்த அளவுக்கு அங்கு இடம் கிடையாது.

ஆனால், அந்த இடத்தை மாற்றியதன் காரணமாக உடனடியாக எல்லோரும் வெளியே வந்து விட்டோம். பாதுகாப்பாக வந்து விட்டோம். இல்லையென்றால் அன்று பெரிய பிரச்சினை இருக்கும் என பேசி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top