பிரபல நடிகை சங்கீதா 90களில் ஹீரோயினாக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ம
ட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக, போட்டியாளராக, நடுவராக, தொகுப்பாளினியாக என பல்வேறு தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நடிகை சங்கீதா.
இடையில் பிரபல பாடகர் க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இடையில் தன்னுடைய அம்மா மீது கடுமையான புகார்களை கூறியிருந்தார் நடிகை சங்கீதா.
ஒருமுறை என்னுடைய மகள் என்னை அம்போ என விட்டு விட்டால். செலவுக்கு கூட பணம் தருவதில்லை என அவருடைய அம்மா பேட்டி கொடுத்திருந்தார். இது குறித்து பேசிய நடிகை சங்கீதா, நான் இளமை காலத்தில் சம்பாதித்த மொத்த பணத்தையும் என்னுடைய அம்மாவிடம் தான் கொடுத்தேன்.
நான் எந்த படத்தில் நடிக்க வேண்டும்.. எந்த படத்தில் நடிக்க கூடாது.. என்பதை முடிவு செய்தது அவர்கள் தான். அட்வான்ஸ் வாங்கியது அவர்கள் தான். சம்பளம் வாங்கியது அவர்கள் தான். என்னுடைய சகோதரர்களும் தன்னுடைய பணத்தை வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால், எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு பணம் தேவைப்படும் என்று ஒரு நாளும் அவர்கள் சிந்தித்தது கிடையாது. கிடைத்த பணத்தை எல்லாம் ஊதாரித்தனமாக செலவு செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களிடம் நான் பணம் கொடுப்பதை நிறுத்தினேன். எதிர்காலத் தேவைக்காக சேமிக்க தொடங்கினேன். தற்போது திருமணம் செய்து கொண்டு என் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
சேமிப்பு என்றால் என்ன என்று தெரியாமல் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் இழந்து விட்டு தற்போது பணம் கொடுக்கவில்லை என்று என் மீது புகார் கொடுக்கிறார்கள் என்று கதறினார் நடிகை சங்கீதா.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல இயக்குனர் பாலாவை பேட்டி கண்டார் சங்கீதா. அதில் பேசிய அவர் பாலாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.
அவர் எழுப்பிய கேள்வி என்னவென்றால், உங்கள் படங்களில் எப்போதுமே சினிமாவால் ஓரங்கட்டப்பட்ட நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கிறீர்கள். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா இதில் விக்ரம் எல்லாம் படங்களில் அறிமுகமாகி அவருக்கு பட வாய்ப்பு இல்லை அவரை ஒரு நடிகராக கூட தமிழ் சினிமா ஏற்றுக்கொள்ளவில்லை என்ற சூழ்நிலையில் அவருடன் படம் செய்து மிகப் பெரிய ஒரு பாதையை காட்டினீர்கள்.
எனக்கும் அப்படித்தான்.. நானும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன்.. தற்போது பிதாமகன் சங்கீதா என்ற ஒரு அடைமொழி எனக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் நான் ராசி இல்லாத நடிகை, நான் நடித்தால் படம் ஓடாது என்று என்னை அடையாளப்படுத்தி ராசியில்லாத நடிகை என்ற வார்த்தையை கூறி கீழே பிடித்து இழுத்து சினிமாவுக்கும் எனக்கும் மிகப்பெரிய தூரத்தை உண்டு பண்ணி விட்டார்கள். சினிமா வாய்ப்பு இல்லாத அந்த வலி என்னை துடிக்க வைத்தது.
ஆனால், எனக்கும் நீங்கள் தான் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதற்கு காரணம் என்ன..? என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் பாலாவிடமும் அந்த கேள்வியை முன் வைத்தார்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் பாலா என்னை சினிமாவை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த கோபத்தின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம் என கூறியிருக்கிறார். இதன் மூலம் இயக்குனர் பாலாவும் என்னை சினிமாவிலிருந்து தனித்து தான் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Loading ...
- See Poll Result